தமிழ் படத்தில் நடிக்கும் தல தோனி?.. வெளியான இன்பச் செய்தி… படம் எப்போ ரிலீஸ்?

0
247

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இந்தியாவில் இருக்கும் பல கோடி கணக்கான ரசிகர்களின் விருப்பமான கிரிக்கெட் வீரராகவும் கதாநாயகனாகவும் இருந்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த இவர் ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார். இவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருட ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றியது. கிரிக்கெட்டிற்கு பிறகு இயற்கை விவசாயம் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த மகேந்திர சிங் தோனி சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருந்தார் .

- Advertisement -

அந்த நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப்படும் முதல் படத்தையும் தமிழ் மொழியிலேயே தயாரிக்க முடிவு செய்து சில மாதங்களுக்கு முன்பு படமும் அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. லெட்ஸ் கெட் மேரீட் என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண்,நதியா ,ஆர்ஜே விஜய் மற்றும் யோகி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ரமேஷ் தமிழ்மணி என்பவர் இந்த படத்தின் இயக்குனராகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். தோனி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதனால் எல்ஜிஎம் திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் மற்றொரு இன்ப அதிர்ச்சி ரசிகர்களுக்கு காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நாயகனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல எம்எஸ்.தோனி இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவல்களில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்று தெரியவில்லை. படம் வந்த பிறகு தான் தோனி நடித்திருக்கிறாரா இல்லையா என்பது தெரியவரும்.