அமெரிக்காவில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை போன்று மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் டில்லி ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் டெக்ஸான் சூப்பர் கிங்ஸ், எம்ஐ நியூயார்க், சியாட்டில் ஓர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் ஆகிய நான்கு அணிகள் பங்கு பெறுகின்றன. அது மட்டுமல்லாமல் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் என மொத்தம் ஆறு அணிகள் பங்கு பெறுகின்றன.
இதில் எம்ஐ நியூயார்க் அணி நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்தோடு இந்த தொடரில் களமிறங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு அணியான டெக்ஸான் சூப்பர் கிங்ஸ் குவாலிபயர் வரை தகுதி பெற்று அதற்குப் பிறகு தோல்வியடைந்து வெளியேறியது.
இதில் தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் பாப் டு பிளஸ்சிஸ் கேப்டனாக தலைமை தாங்கி இருக்கிறார்.
தற்போதைய அணியில் நியூசிலாந்து அணி வீரர்களான டெவான் கான்வே மற்றும் சான்ட்னர் ஆகியோருடன் பாஃப் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் இருக்கிறார். இவர்களை தவிர மிலிந்த் குமார், முகமது மொஹ்சின், சைதேஜா முக்கமல்ல, கால்வின் சாவேஜ், ஜியா ஷாஜாத், கேமரூன் ஸ்டீவன்சன் மற்றும் ஜியா உல்-ஹக் ஆகிய வீரர்களும் டெக்சன் அணியில் உள்ளனர்.
இந்த இரண்டாவது சீசனில் காயம் அடைந்த நியூசிலாந்து வீரர் டேரில் மிச்சலுக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமது அறிவிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் இவரை தவிர தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனான மார்க்ரம், ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் மற்றும் ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகிய வீரர்களும் இந்த இரண்டாவது சீசனில் டெக்ஸான் அணிக்காக விளையாட இருக்கின்றனர்.
டெக்ஸான் அணியை பொறுத்தவரை கேப்டன் பாப், ஸ்டானிஸ், நவீன் உல் ஹக் மற்றும் டிவைன் பிராவோ ஆகிய சர்வதேச அனுபவம் பெற்ற வீரர்கள் இருப்பதால் நிச்சயம் டெக்ஸான் அணி எதிரணியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது சந்தேகம் இல்லை. கடந்த சீசனை விட இந்த சீசனில் டெக்ஸான் அணி வலுவாக இருப்பதால் இந்த முறை கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க:என்னை மோசமா கொச்சைப்படுத்தினாங்க.. அதுக்கு பதில் சொல்ல இந்த முடிவ எடுத்தேன் – ஹர்திக் பாண்டியா பேட்டி
டெக்ஸான் அணி தனது முதல் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது.
டெக்ஸான் அணியின் வீரர்களின் விபரம்:
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேட்ச்), டுவைன் பிராவோ, டெவோன் கான்வே, ஆரோன் ஹார்டி, மிலிந்த் குமார், ஐடன் மார்க்ராம், நூர் அகமது, சைதேஜா முக்கமல்லா, முகமது மொஹ்சின், ராஜ் நன்னன், மிட்செல் சான்ட்னர், கால்வின் சாவேஜ், ஜியா ஷாஜாத், கேமரூன் ஸ்டீவன்சன், ஜோசுவா டிராம்ப், ஜியா-உல்-ஹக், நவீன் உல்-ஹக், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜெரால்ட் கோட்ஸி