தற்போது அமெரிக்காவில் ஆறு அணிகள் பங்கு பெற்று விளையாடும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் நியூயார்க் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொண்ட போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற கேப்டன் கீரன் பொல்லார்டு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய வந்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது. இந்த தொடரில் ஏற்கனவே அந்த அணி சிறப்பாக விளையாடிய ஒரு போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆட்டக்காரர்கள் டெவோன் கான்வே 28 பந்துகளில் 40 ரன்கள், கேப்டன் பாப் டு பிளேசிஸ் 38 பந்துகளில் அதிரடியாக 61 ரன்கள் எடுத்தார்கள். இதற்கு அடுத்து வந்த ஆரோன் ஹார்டி 17 பந்தில் 22 ரன்கள், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் ஆட்டம் இழக்காமல் 18 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்கள்.
டெக்சா சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. நியூயார்க் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு தரப்பில் டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரஷித் கான் நான்கு ஓவர்கள் பந்துவீசி 17 ரன்கள் மட்டுமே விட்டு தந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க ஜோடி ஏமாற்ற, மூன்றாவது இடத்தில் வந்த அமெரிக்கா பணிக்கு கேப்டனாக இருக்கும் மோனங்க் படேல் சிறப்பாக விளையாடி 45 பந்தில் 61 ரன்கள் எடுத்து போராடினார். நிக்கோலஸ் பூரன், கீரன் பொல்லார்டு மற்றும் டிம் டேவிட் என அதிரடி வீரர்கள் அனைவரும் ஆட்டம் இழந்தார்கள்.
இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் வந்த ரஷீத் கான் அதிரடியாக விளையாடி நான்கு பௌண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து மிரட்டினார். அவரின் போராட்டத்தில் நியூயார்க் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அவர் ஆட்டம் வளர்ந்த பிறகு அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையும் படிங்க : பும்ரா அர்ஸ்தீப் வரிசையில்.. இந்தியா கண்டுபிடித்த 3வது தரமான டி20 வேகப்பந்துவீச்சாளர் இவர்தான்.. முழு விபரம்
இறுதியாக பரபரப்பான போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் நான்கு ஓவர்களுக்கு 50 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.