பும்ரா அர்ஸ்தீப் வரிசையில்.. இந்தியா கண்டுபிடித்த 3வது தரமான டி20 வேகப்பந்துவீச்சாளர் இவர்தான்.. முழு விபரம்

0
1714

இந்திய அணியை பொறுத்த வரை தரமான பேட்ஸ்மேன்களுக்கு என்றும் பஞ்சமே இருக்காது.

சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், கபில்தேவ் என்று ஆரம்பித்த இந்திய அணியின் பேட்டிங் வரிசை அதற்குப் பிறகு சச்சின், ஷேவாக், கங்குலி, டிராவிட் போன்ற தரமான பேட்ஸ்மேன்களால் அவர்களது இடம் நிரப்பப்பட்டது.

- Advertisement -

அதற்குப் பிறகு கோலி, ரோஹித், டோனி, யுவராஜ் போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் அவர்களது இடத்தை பூர்த்தி செய்து வரும் நிலையில், தற்போது கில் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் எதிர்கால நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்திய அணிக்கு காலம் காலமாக இருந்து வரும் பிரச்சனை என்றால் அது பந்துவீச்சு மட்டுமே. 2011ம் ஆண்டு இந்திய அணி ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற போது ஜாகிர் கான் மட்டுமே இந்தியாவின் தரமான வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்தார்.

இந்திய அணியில் நிறைய பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், தரமாக, ரன்களை கட்டுப்படுத்தக்கூடிய பந்துவீச்சாளர்கள் கிடைப்பது அரிதலும் அரிது. தற்போது தான் இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷமாக பும்ரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் வேகப்பந்து கூட்டணியில் இந்திய அணி சமீபத்தில் நடைபெற்ற 2024 டி20 உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியாவிற்கு கிடைத்த மற்றொரு தரமானடி20 பந்துவீச்சாளராக ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் முகேஷ் குமார் தன் திறமையை மெல்ல நிரூபித்து வருகிறார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கடைசி போட்டியில் 3.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி தன் பந்துவீச்சு திறமையை உணர்த்தி இருக்கிறார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் மொத்தமாக மூன்று போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

இவர் ஏற்கனவே ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வரும் நிலையில், அவரது திறமையை கண்டறிந்த இந்திய அணி நிர்வாகம் சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. முகேஷ் குமார் மற்ற பந்துவீச்சாளர்களை விட ஒரு படி மேல் நிற்பதற்கு காரணம் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும் திறமையை பெற்று இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளரும் முழுமையாக பயன்படுத்தி அடிக்க முடியாத யார்க்கர் பந்துகளை தொடர்ந்து வீசுகிறார்.

இதையும் படிங்க:பாபர் ரிஸ்வான்.. 3 வாரம் அனுமதி மறுப்பு.. ஒரு வருட சம்பளத்தை விட அதிகம் இழந்த சோகம்

அழுத்தமான சூழ்நிலைகளில் அவரது பந்து வீச்சு இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. முகேஷ் குமாருக்கு வேகம் மற்றும் பவுன்ஸ் போன்றவை இருப்பதாலும் புதிய பந்தை ஸ்விங் செய்வதிலும், டெத் ஓவர்களில் சிறப்பான யார்க்கர்களை வீசுவதிலும் தனித்து நிற்கிறார். இந்தியா மற்றும் இலங்கை போன்ற வேகம் மற்றும் பவுன்சில் வேரியேஷன் கொண்ட ஆடுகளிலும் இவரால் சிறப்பாக செயல்பட முடியும். இனி வரும் தொடர்களில் இவருக்கு கிடைக்கும் வாய்ப்பைப் பொறுத்து இந்தியாவின் எதிர்காலமாக மாறவும் வாய்ப்புண்டு.

- Advertisement -