டெஸ்ட் கிரிக்கெட் அழிய ஐபிஎல்தான் காரணம் – இங்கிலாந்து வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு!

0
324
IPL

உலகின் நம்பர் 1 டி20 கிரிக்கெட் லீக் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக்தான். சமீபத்தில் இதன் சாட்டிலைட் மற்றும் ஆன்லைன் ஒளிபரப்பு உரிமம் உலகின் இரண்டாவது பெரிய ஒளிபரப்பு உரிமை தொகைக்கு ஏலம் போனது!

போட்டிகளின் தரம், வீரர்களுக்கான சம்பளம், வீரர்களுக்கான பயிற்சி மற்றும் இதர வசதிகள், பாதுகாப்பு என ஐபிஎல் தொடர் உலகின் முதன்மையான டி20 தொடராக இருக்கிறது. ஐசிசி நடத்தும் தொடர்களை விட ஐபிஎல் தொடர் வசதி வாய்ப்பில் மிகப்பெரியது!

- Advertisement -

பல நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல் தொடரில் எப்படியாவது தாங்கள் இடம் பெற்று விட வேண்டும் என்று குறிக்கோளாகவே கொண்டு செயல்படுகிறார்கள். அந்த அளவிற்கு ஐபிஎல் தொடர் மூலம் அவர்களுக்கு பொருளாதார தேவைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் வீரரான 63 வயது இயான் போத்தம் கூறுகையில் ” நீங்கள் இப்போது இந்தியாவிற்கு சென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க மாட்டீர்கள். அங்கு எல்லாமே இப்பொழுது ஐபிஎல்தான். பெரிய பணம் அங்கு கிடைக்கிறது. ஆனால் இது எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்று நினைக்கிறீர்கள்? டெஸ்ட் கிரிக்கெட் 100 வருடங்களுக்கு மேல் இருந்து இருக்கிறது. அது எங்கும் போகாது!” என்று தெரிவித்திருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஆஸ்திரேலியா அணி தற்போது இந்தியாவிற்கு சென்று டெஸ்ட் போட்டி தொடர் விளையாடுகிறது. ஆனால் அவர்களுக்கு ஒரு பயிற்சி போட்டி கூட அங்கு கிடையாது. இங்கிலாந்தில் தற்பொழுது ஒரு மாறுபட்ட ஆடுகளங்களில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. அதை உணர்ந்து ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவன் ஸ்மித் நான் சசக்ஸ் அணிக்காக விளையாட போகிறேன் என்று அறிவித்திருக்கிறார். அவர் ஏன் அந்த அணியின் மிக முக்கியமான பேட்மேனாக இருக்கிறார் என்பதற்கு இதுதான் காரணம்” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -