பேசாம பாபரை பேட்டிங் கோச் ஆக்கிடுங்க.. கில்லெஸ்பி இந்த வேலைய ஆஸியில வச்சுக்கோங்க – பசித் அலி விமர்சனம்

0
93
Gillespie

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் பாகிஸ்தானில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த தொடரில் முதல் போட்டி நாளை ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பெயர்ச்சியாளர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி திட்டங்கள் குறித்து கடுமையாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ராவல்பிண்டியில் நாளை துவங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் சுழல் பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாமல் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டு ஆஸ்திரேலியா அணி களம் இறங்குகிறது.

- Advertisement -

மேலும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியில் ஒரு பிரதான சுழல் பந்துவீச்சாளர் கூட கிடையாது. மேலும் ஜேசன் கில்லெஸ்பி டெஸ்ட் அணிக்கு தனிப்பட்ட முறையில் பேட்டிங் பயிற்சியாளர் என்று யாரையும் கூட்டி வரவில்லை. இத்தோடு பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு ஆஸ்திரேலியா அடிலைடு அகாடமியில் வேலை செய்த ஒருவரை கூட்டி வந்திருக்கிறார்.

தற்போது இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது “தற்போதைய எதிரணி குழந்தை போன்றது. ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இதே ஆடுகளத்தை இங்கிலாந்துக்கு எதிராக உங்களால் அமைக்க முடியுமா? வெள்ளைப் பந்து அணிக்கு கேரி கிரிஸ்டனுக்கு தனிப்பட்ட முறையில் பேட்டிங் பயிற்சியாளர் தேவையில்லை இல்லையா?

- Advertisement -

இதேபோல் கில்லெஸ்பிக்கு பந்து வீச்சு பயிற்சியாளர் எதற்கு? மேலும் தனிப்பட்ட முறையில் பேட்டிங் பயிற்சியாளர் இல்லாமல் இருக்கிறது. அணியில் இப்பொழுது பாபர் அசாம் எஞ்சி இருக்கிறார் அவருக்கு அந்த பொறுப்பை கொடுத்து விடலாம். அவர் சரியாக இருப்பார்.

ஜேசன் கில்லெஸ்பி நிறைய கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். இங்கிலாந்து கவுண்டி யார்க்க்ஷைர் அணியில் சிறந்த பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார். ஆனால் பாகிஸ்தானில் இப்படியான வேலையெல்லாம் செய்யக்கூடாது.

இதையும் படிங்க : ஆஸி டூர்ல பிசிசிஐ பிளான் மோசமானது.. ஓய்வு எடுக்கவா அங்க போறிங்க? உடனே மாத்துங்க – கவாஸ்கர் அதிருப்தி

பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியின் உயர் செயல் திறன் பயிற்சியாளராக அடிலைடில் இருந்து ஒருவரை கூட்டி வந்தார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பாகிஸ்தான்கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தூங்குகிறார்களா? இப்படி கூட்டி வந்தவரை அடிலைடில் ஏற்கனவே நீக்கி விட்டார்கள். அவருக்கு ஒழுங்கான முறையில் பயிற்சி அளிக்கவே தெரியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -