டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்.. இந்தியாவை தூக்கிவிட்ட நியூசிலாந்து.. பங்களாதேஷ் மீண்டும் கீழே!

0
2997
ICT

டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரசியப்படுத்தி ரசிகர்களை மைதானத்திற்கு வர வைப்பதற்காக, ஐசிசி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகக் கொண்டு வந்தது.

முதல் இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கைப்பற்றி இருக்கிறது. இந்திய அணி இரண்டு முறையும் இறுதி போட்டிக்கு முன்னேறி சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல முடியாமல் தவற விட்டிருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது 2023 – 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணிக்கு 16 புள்ளிகள், போட்டி வெற்றி தோல்வி இன்றி டிரா ஆனால் இரண்டு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள், ஒரே ரன்கள் எடுத்து டை ஆனால் இரு அணிகளுக்கும் தலா 8 புள்ளிகள் கொடுக்கப்படும்.

மேலும் வெற்றி சதவீத முறையும் பின்பற்றப்படும். உதாரணமாக நான்கு போட்டிகள் விளையாடி இரண்டு போட்டிகள் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் தோற்றால், வெற்றி சதவீதம் 50 இருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்தத் தொடரில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இரு அணிகளுக்கும் முதல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியதும், பதினாறு புள்ளிகள் பெற்றதோடு, வெற்றி சதவீத புள்ளியாக 100 பெற்று, புள்ளி பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவது இடம் பிடித்தது. இந்திய அணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்திய அணி இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஒரு போட்டியை வென்று, ஒரு போட்டியை டிரா செய்து 16 புள்ளிகளுடன், வெற்றி சதவீதம் 66.7 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் காரணமாக பங்களாதேஷ் அணியின் வெற்றி சதவீதம் 50 புள்ளிகளாகக் குறைய, இந்திய அணி மீண்டும் இரண்டாவது இடத்தை பிடித்தது. பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் இருவருமே மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்கள்.

ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இருக்கின்றன. ஏழாவது இங்கிலாந்தும், எட்டாவது இடத்தில் இலங்கை மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளும் இருக்கின்றன!

- Advertisement -