இந்திய அணியை இந்தியாவில் வீழ்த்த.. நியூசி வில்லியம்சன் இந்த ஐடியா தந்திருக்கிறார் – டெம்பா பவுமா தகவல்

0
89
Bavuma

இந்தியாவில் இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கேன் வில்லியம்சன் தன்னிடம் ஒரு சிறிய விஷயத்தை தெரிவித்து இருப்பதாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கேப்டன் டெம்பா பவுமா கூறியிருக்கிறார்.

இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளுக்கு இந்த தொடர் இரண்டு அணிகளுக்குமே முக்கியமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

கேன் வில்லியம்சன் சொன்னார்

இந்தியாவில் வைத்து இந்திய அணியை டெஸ்ட் தொடரில் வைட் வாஸ் செய்த ஒரே அணியாக நியூசிலாந்து இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த அரிய சாதனையை நியூசிலாந்து இந்தியாவில் செய்தது. எனவே இந்திய அணியை இந்தியாவில் வீழ்த்த டெம்பா பவுமா கேம் வில்லியம்சனிடம் யோசனை கேட்டிருக்கிறார்.

இதுகுறித்து டெம்பா பவுமா பேசும் பொழுது ” சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் நடந்த ஒரு கிரிக்கெட் நிகழ்ச்சியின் போது இந்திய அணியை வீழ்த்துவது குறித்து சில குறிப்புகளை நான் கேன் வில்லியம்சன் இடம் கேட்டேன். அவர் மொத்தமாக பெரியதாக எதையும் சொல்லிவிடவில்லை. ஆனால் இந்தியாவில் டாஸ் வெல்வது முக்கியமான விஷயம். அதில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொன்னார். எனவே நான் டாஸ் போடுவதற்கு நாணயத்தை சுண்டி விடுவதில் பயிற்சி செய்து வருகிறேன்”

- Advertisement -

இது நிச்சயம் கடினமானது

“நீங்கள் இந்தியாவுக்கு டெஸ்ட் தொடர் விளையாட வரும் பொழுது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் உங்களிடம் அவர்கள் என்ன மாதிரியான கேள்விகளை முன்வைக்க போகிறார்கள் என்பது தெரிந்ததுதான். நிச்சயமாக அவர்கள் உங்களுக்கு பெரிய சவாலை கொடுப்பார்கள். இது எந்த வகையிலும் எங்களுக்கு எளிதாக இருக்காது என்பது தெரியும்”

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்த 3 வீரர்கள் தான் எக்ஸ் பேக்டர்கள்.. முன்னாள் வீரர் கருத்து

“எங்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் மாத்திபேட்டிங்கில் மார்க்ரம், பந்துவீச்சில் ரபாடா ஆகியோர் எழுந்து நின்றார்கள். தற்போது இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் எங்கள் வீரர்கள் அப்படி எழுந்து நிற்க வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -