தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்த 3 வீரர்கள் தான் எக்ஸ் பேக்டர்கள்.. முன்னாள் வீரர் கருத்து

0
72

இந்தியா, தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டிக்கான மூன்று எக்ஸ் ஃபேக்டர் வீரர்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தேர்வு செய்தார். இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முன்னிலை பெறும்.இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பத்ரிநாத், “த்ருவ் ஜூரல் ரன்களை கீழ் வரிசையில் மட்டுமே அடித்துள்ளார்.

- Advertisement -

சாய் சுதர்சனுக்கு சிக்கல் இல்லை:

“அவர் ரிஷப் பண்ட் இடத்தில் மட்டுமே அடித்துள்ளார். எனவே நம்பர் 3 இடம் சாய் சுதர்ஷனுக்கே உரியது. அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் ரன்கள் அடித்தார். இங்கிலாந்தில் அவரது பங்களிப்பு குறைவாக இருந்தாலும் முக்கியமானது. சாய் சுதர்ஷன் பல நல்ல பார்ட்னர்ஷிப்களில் ஈடுபட்டார்.”

“எனவே அவர் நிச்சயம் நீண்ட ரன் பெறுவார் என்று நம்புகிறேன். குறிப்பாக இடது கை பேட்ஸ்மேனாக நம்பர் 3-இல். த்ருவ் ஜூரலுக்கு காத்திருக்க வேண்டும் .ஏனெனில் அவர் ரன்கள் அடித்த இடம் கீழ் வரிசைதான். இதேபோன்று தென்னாப்பிரிக்க அணியில் சிஎஸ்கே வீரர் பிரவீஸ் கவனிக்கத்தக்க வீரராக இருப்பார். என்னை பொறுத்தவரை அவர் ஒரு X பேக்டர் உள்ள வீரர்”

- Advertisement -

சிராஜ் வேறு மாதிரி:

“நான் சிராஜின் முதல் கேப்டன். அவர் எப்போதும் இப்படித்தான். அது அவருடன் பிறந்ததே. நான் கேப்டனாக இருந்தபோது பல பந்துவீச்சாளர்கள் மதியத்திற்கு பிறகு மறைந்து கொள்வார்கள். எங்கே நான் பந்து கொடுப்பேன் என்று பயப்பிடுவார்கள்.ஆனால் சிராஜ் அதற்கு நேர் எதிர். அவர் தொடர்ந்து என்னிடம் பந்து வீசலாமா என்று கேட்பார்.”

இதையும் படிங்க: சிஎஸ்கே சிங்கத்தை தட்டி தூக்கிய கொல்கத்தா.. அதிரடி நாயகன் வாட்சனுக்கு முக்கிய பொறுப்பு.. ஷாரூக்கான் அதிரடி

” நான் ‘போதும், போதும், பிறகு வீசலாம்’ என்று சொல்லும் வரை. எந்த பந்து, எந்த நிலைமை, வெயில் அல்லது குளிர், அவர் 100% கொடுப்பார்.அவர் குறைவாக மதிப்பிடப்பட்ட வொர்க்ஹார்ஸ். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் அதிக ஓவர்களை வீசியவர் சிராஜ். பும்ராவுக்கும் அவருக்கும் 100 ஓவர்கள் வித்தியாசம். அவ்வளவு வீசியுள்ளார். இப்படிப்பட்ட பந்துவீச்சாளர் கேப்டனுக்கு வரப்பிரசாதம். பந்து பழையதாக இருந்தாலும், பிட்ச் ஃப்ளாட்டாக இருந்தாலும், சிராஜ் விருப்பத்துடன் பந்தை எடுத்து 100% வேகத்தில் ஓடி வருவார்,” என்றார் பத்ரிநாத்.

- Advertisement -