என்ன சொன்ன திரும்ப சொல்லு? – அடுத்த பந்தே சொல்லி வைத்து தூக்கிய சிராஜ் – வீடியோ இணைப்பு!

0
8220
Siraj

பங்களாதேஷ் சென்றுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை முடித்துக் கொண்டு தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிட்டாகிராம் மைதானத்தில் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வீழ்ந்தும் எழுந்தும் ஒரு மாதிரி சமாளித்து சென்றது.

- Advertisement -

இதற்கடுத்து இரண்டாவது நாளில் களத்தில் நின்ற ஸ்ரேயாஸ் உடனுக்குடன் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு குல்தீப் யாதவுடன் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். இந்த ஜோடி 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது. முடிவில் இந்திய அணி 404 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் அணி தரப்பில் தாஜுல் இஸ்லாம், மெகதி ஹசன் தலா நான்கு விக்கட்டுகளை கைப்பற்றினார்கள்!

இதற்கு அடுத்து களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி அளித்தார் சிராஜ். சான்டோ விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து யாசிர் அலியை உமேஷ் கிளீன் போல்ட் செய்தார்!

இதற்கு அடுத்து பங்களாதேஷ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லிட்டன் தாஸ் விளையாட வந்து அதிரடியாக பவுண்டரிகள் அடிக்க ஆரம்பித்தார். முகமது சிராஜ் பந்துவீச்சின் போது அவர் லிட்டன் தாசிடம் ஏதோ சொல்ல, நீ சொல்லியது எனக்கு புரியவில்லை திரும்ப சொல் என்று ரிட்டன் தாஸ் கேட்க களத்தில் பரபரப்பு நிலவியது. உடனே நடுவர் தலையிட்டு விலக்கி வைத்தார்.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்த பந்தை வீசிய முகமது சிராஜ் லிட்டன் தாசை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். அவருடன் சேர்ந்து விராட் கோலியும் காதில் கை வைத்து நீ இப்பொழுது சொல் கேட்கவில்லை என்று சூடேற்றினார். இதற்கு அடுத்து ஜாகிர் ஹாசன் விக்கட்டையும் சிராஜ் கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்பொழுது பங்களாதேஷ அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. களத்தில் அனுபவ வீரர்களான முஷ்பிகியூர் ரஹீம் மற்றும் சகிப் ஹல் ஹசன் இருவரும் விளையாடுகிறார்கள்.