பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அணியிடம் 1 ரன்னில் தோல்வி அடைந்த பிசிசிஐ தலைவர் கங்குலியின் அணி

0
756
Jay Shah and Sourav Ganguly

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிசிசிஐ தலைமையில் ஏஜிஎம் பெஸ்டிவ் என்கிற பெயரில் 15 ஓவர்கள் கொண்ட போட்டி நேற்று நடந்து முடிந்தது. பிசிசிஐ தலைவர் கங்குலி சார்பாக ஒரு அணியும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தலைமையில் ஒரு அணியும் நேற்று மோதிக்கொண்டன. முதலில் ஜெய் ஷா அணி பேட்டிங் செய்தது. 15 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் குவித்து, பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அணிக்கு 129 ரன்கள் இலக்காக அமைத்தது.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அணியில் அதிகபட்சமாக ஜெயதேவ் ஷா 40 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக அருண் துமால் 36 ரன்களும், ஜெய் ஷா 10 ரன்களும் குவித்தனர். மிக அற்புதமாக பந்துவீசி சவுரவ் கங்குலி 19 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

ஒரு ரன்னில் தோல்வி அடைந்த பிசிசிஐ தலைவர் அணி

பின்னர் விளையாடத் தொடங்கிய பிசிசிஐ தலைவர் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டும் குறைத்து இறுதியில் ஒரு வித்தியாசத்தில் பிசிசிஐ செயலாளர் அணியிடம் தோல்வி அடைந்தது. பிசிசிஐ செயலாளர் அணியில் ஜெய் ஷா 7 ஓவர்கள் வீசி 58 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

சௌரவ் கங்குலி 20 பந்துகளில் 2 சிக்ஸர் கள் மற்றும் 4 பவுண்டரிகள் என 35 ரன்கள் குவித்து அசத்தினார். போட்டியின் விதிமுறைப்படி அதற்குமேல் விளையாட முடியாத சூழ்நிலையால் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். இறுதிவரை சவுரவ் கங்குலி இருந்திருந்தால் அல்லது இன்னும் ஓரிரு அவர் மேற்கொண்டு இருந்திருந்தால் நிச்சயமாக பிசிசிஐ தலைவர் அணி வெற்றி பெற்றிருக்கும்.

ஆனால் மிக சாமர்த்தியமாக பந்துவீசி பிசிசிஐ செயலாளர் அணி பிசிசிஐ தலைவர் அணியை இறுதிவரை கட்டுபடுத்தி, ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

- Advertisement -