பிசிசிஐ தன்னைத் தேர்வு செய்தது குறித்து ஷர்தூல் தாக்கூர் சுவாரசிய பேட்டி

0
123
Shardul Thakur about BCCI

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்து 27 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடி தொடங்கிய இந்திய அணி, இன்னிங்ஸ் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் வெற்றி இலக்காக 240 ரன்களை தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்திய அணி தற்பொழுது அமைத்து உள்ளது.

- Advertisement -

பௌலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்திய தாகூர்

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் மத்தியில் தாகூர் நேற்று அபாரமாக பந்து வீசி அந்த அணியின் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர், கீகன் பெட்டர்சன், வேன் டெர் டஸ்சென், பவுமா, வெரெய்யன், மார்க்கோ ஜென்சன் மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி தென்னாப்பிரிக்க அணியை அதிக ரன்கள் குவிக்க விடாதபடி அவர் செய்தார்.

நேற்றைய போட்டியில் 7 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியதன் மூலமாக தென்னாப்பிரிக்க மண்ணில், ஒரு இன்னிங்சில் சிறந்த பௌலிங் விழுக்காடு வைத்த சாதனையை தன் பெயருக்குப் பின்னால் இணைத்துக் கொண்டார். பௌலிங்கை தொடர்ந்து இந்திய அணிக்காக இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கிலும் அவர் பாரபட்சம் பார்க்கவில்லை.

இன்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் குவிக்குமா என்ற அச்சத்தில் அனைத்து இந்திய ரசிகர்களும் இருந்த நிலையில், ஹனுமா விஹாரி உடன் ஜோடி போட்டு 24 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 28 ரன்கள் குவித்தார். அவரது அதிரடியான ஆட்டம் இந்திய அணி மீது இருந்த அழுத்தத்தை சற்று குறைத்தது. இறுதியில் இந்திய அணியும் 200(266) ரன்களுக்கு மேல் குவித்தது.

- Advertisement -

அணி நிர்வாகத்திற்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்

எனது திறமையை பற்றி இந்திய நிர்வாகம் மற்றும் இந்திய தேர்வுக் குழுவிற்கு நன்கு தெரியும். ஒரு போட்டியில் என்னால் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை பற்றி அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அதன் காரணமாகவே நான் இன்று சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்று நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளுடன் தாகூர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.