டி20 உலகக் கோப்பை 2024

கோலி எப்படி வேணா ஆடட்டும்.. ரோகித் கண்டுபிடிச்சிருக்க அதே போதும்.. உ.கோ இந்தியாவுக்குதான் – மஞ்ச்ரேக்கர் பேச்சு

ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் சந்திக்கின்றன. இந்தப் போட்டி பார்படாஸ் பிரிட்ஜ்டவுன் கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. விராட் கோலியின் பேட்டிங் சுமாராக இருந்து வரும் நிலையில் அதைப்பற்றி கவலைப்பட அவசியமே இல்லை என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி பெங்களூர் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்து 15 போட்டிகளில் 741 ரன்கள் குவித்தார். சுழல் பந்துவீச்சாளர்களை ஸ்லாக் ஸ்வீப் ஷாட் மூலம் சிக்ஸர்கள் அடித்து, தனது ஸ்டிரைக் ரேட் 155 என உயர்த்தி வைத்திருக்கிறார்.

இதன் காரணமாக அவரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் துவக்க வீரராக மேலே கொண்டு வந்தது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களும் அவருடைய வழக்கமான பேட்டிங் அணுகுமுறைக்கு மிக பொருத்தமானதாகவே இருந்தது. எனவே பெரிய ஸ்கோரை வழக்கம் போல் இந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் அடிப்பார் என பலரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் விராட் கோலி மிகவும் ஏமாற்ற அளிக்கும் விதமாக 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். மேலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 100 என்ற அளவில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக அவருடைய பேட்டிங் தோல்வி அடைந்திருக்கிறது. இன்றைய இறுதிப் போட்டியிலும் இதுவே இந்திய அணிக்கு கவலையான விஷயமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் “விராட் கோலியின் பார்ம் பற்றி உண்மையில் கவலைப்படவில்லை. இங்கு அணியின் பார்ம் எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியமானது. நிச்சயமாக இந்தியா இந்த டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றும். இதற்காக இந்தியா ஒரு புதிய டெம்ப்ளேட்டை கண்டுபிடித்திருக்கிறது. அது டி20 கிரிக்கெட்டை விளையாடுவதற்கான நவீன டெம்ப்ளேட். அது இதுவரையில் பெரிய பலனை கொடுத்து வருகிறது.

இதையும் படிங்க : ரோகித் தேவைப்பட்டால் இதையும் செய்வாரு.. அவரோட கேப்டன்சிதான் எனக்கு மகிழ்ச்சியான விஷயம் – பும்ரா பேட்டி

தென் ஆப்பிரிக்கா அணியை பொருத்தவரையில் பந்துவீச்சில் அன்றிச் நோர்க்கியா மற்றும் ரபடா இருவரும் முக்கியமானவர்களாக இருப்பார்கள். அதே சமயத்தில் பேட்டிங்கில் குயின்டன் டி காக் ஒருவர் மிகவும் முக்கியமானவர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts