நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. மேலும் இன்று இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை சந்தித்து விளையாட இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய கேப்டன் ரோகித் சர்மா பற்றி ஜஸ்பிரித் பும்ரா பேசியிருக்கிறார்.
பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடர்ந்து விளையாடியதற்கும், மேலும் இந்திய அணியில் இடம் பெற்றதிலும் ரோகித் சர்மாவின் பங்கு நிறைய இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு கட்டத்தில் அதற்கான வாய்ப்பை நிறுத்தி விட அணி நிர்வாகம் நினைத்த பொழுது, ரோகித் சர்மாவே நம்பிக்கை வைத்து அவரை அணியில் தொடர வைத்திருக்கிறார்.
மேலும் ரோகித் சர்மா பும்ரா கூட்டணி ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறது. பும்ராவை ரோகித் சர்மா மிகவும் சிறப்பாக பயன்படுத்தக்கூடியவராக இருந்திருக்கிறார். அதை அவரே கடந்த போட்டியில் கூறவும் செய்திருந்தார்.
இத்தோடு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டது பும்ராவுக்கு பெரிய அதிருப்தியை உருவாக்கி இருந்தது. அவர் அதை சில சமயங்களில் வெளிப்படுத்தவும் செய்திருந்தார். அந்த அளவிற்கு தன்னுடைய கேப்டன் மீது அவருக்கு அபிமானம் அதிகம்.
தற்போது ரோஹித் சர்மா பற்றி பேசியுள்ள ஜஸ்பிரித் பும்ரா “ரோகித் சர்மா முற்றிலும் சிறந்தவர். அவர் கடந்த உலக கோப்பையிலும் மிகச் சிறப்பாக இருந்தார். அவர் வீரர்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து வெளிப்படுத்த விடுகிறார். மேலும் சரியான நேரம் வரும் பொழுது அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார். அது போட்டியில் நிறைய பயன் உள்ளதாக இருக்கிறது. அவருக்கு கீழ் விளையாடியதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அணியும் நல்ல மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக இருக்கிறது.
இதையும் படிங்க : இந்திய டீம்ல 2 பேர் பத்தி ஓவர் திங்க் பண்ணாதிங்க.. உங்கள மொத்தமா முடிச்சிடுவாங்க – மோர்னே மோர்கல் அட்வைஸ்
அதிக நேரம் கிடைப்பது அதிகம் யோசித்து விஷயங்களை சிக்கலாக்கிக் கொள்ள ஒரு வழியாக அமைந்து விடும். தற்போது எங்களுக்கு அதிக நேரம் கிடையாது. நாங்கள் பயணத்திலும் விளையாட்டிலும் தொடர்ந்து இருக்கிறோம். இதனால் நாங்கள் எதையும் அதிகமாக யோசித்து சிக்கல் ஆக்கிக் கொள்வதில்லை. இது இந்த வகையில் நன்மையாகவே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






