93 ரன்.. டி20 உகோ வரலாற்றில் இந்திய அணி சாதனை வெற்றி.. இஷான் வருண் அசத்தல்.. இரண்டாவது சுற்று வாய்ப்பு பிரகாசம்

0
5
Varun

இன்று டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி நமிபியா அணிக்கு எதிரான போட்டியில் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நமிபியா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்திய அணியில் அபிஷேக் சர்மா உடல்நலம் இல்லாத காரணத்தினால் விளையாடவில்லை. எனவே சஞ்சு சாம்சங் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

பெரிய இலக்கு தவறியது

இந்திய அணிக்கு தொடக்க வீரர்களில் சஞ்சு சாம்சன் 8 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் வெறும் 20 பந்தில் அரைசதம் அடித்ததோடு 24 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து திலக் வர்மா 21 பந்தில் 25 ரன், சிவம் துபே 16 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இன்னொரு முனையில் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா 28 பந்தில் நான்கு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 52 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. நமிபியா கேப்டன் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி ஒரு கட்டத்தில் 250 ரன்கள் எடுக்கும் நிலையில் இருந்து தவறவிட்டது.

- Advertisement -

இந்திய அணி வெற்றி

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய நமிபியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் லாரன் ஸ்டீன்காம்ப் 20 பந்தில் 29 ரன்கள், ஜான் ப்ரைலின்க் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்து பவர் பிளேவில் நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ஆனால் இதை மற்ற வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இதையும் படிங்க : 209 ரன்.. இஷான் கிஷான் தோனியும் செய்யாத சாதனை.. பாகிஸ்தான் போட்டியில் வரப்போகும் பிரச்சனை

இதைத்தொடர்ந்து நமிபியா அணி 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்னில் சுருண்டது. இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையில் தன்னுடைய அதிகபட்ச ரன் வித்தியாச வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்திய அணியின் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மூன்று ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -