209 ரன்.. இஷான் கிஷான் தோனியும் செய்யாத சாதனை.. பாகிஸ்தான் போட்டியில் வரப்போகும் பிரச்சனை

0
4
Ishan

இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து இருக்கிறது.

இந்திய அணி இன்று இரண்டாவது போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக டெல்லியில் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார அபிஷேக் சர்மா உடல்நிலை சரியில்லாததால் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருடைய இடத்தில் சஞ்சு சாம்சன் களம் இறங்கினார்.

- Advertisement -

இஷான் கிஷான் சாதனை

முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடியாக எட்டு பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உடன் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் விளையாடிய இஷான் கிஷான் 20 பந்துகளில் அரை சதம் அடித்து, 24 பந்துகளில் 61 ரன்கள் உடன் ஆட்டம் இழந்தார்.

இதுவரை டி20 உலகக் கோப்பை தொடரில் எந்த ஒரு இந்திய விக்கெட் கீப்பரும் அரைசதம் அடித்தது இல்லை. டி20 உலகக் கோப்பை தொடரை கேப்டனாக தோனி வென்று இருந்த பொழுதும் கூட அவர் அரைசதம் அடித்ததில்லை. இன்று முதல்முறையாக இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் டி20 உலகக் கோப்பையில் அரைசதம் அடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணிக்கு சிக்கல்

இதைத் தொடர்ந்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் 13 பந்தில் 12 ரன்கள், திலக் வர்மா 21 பந்தில் 25 ரன்கள், சிவம் துபே 16 பந்தில் 23 ரன்கள், ரிங்கு சிங் 6 பந்தில் 1 ரன், அக்சர் படேல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்கள். இன்னொரு பக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்து 28 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க : 10 விக்கெட்.. இங்கிலாந்து கூட ஆடியது நீங்கதானா நேபாள்?.. கலக்கிய இத்தாலி – வினோதமான போட்டி

இந்த போட்டியில் பாகிஸ்தானின் உஸ்மான் தாரிக் போல பக்கவாட்டில் இருந்து சுழல் பந்து வீசிய நமீபியா கேப்டன் 4 விக்கெட் கைப்பற்றினார். இவருடைய பந்துவீச்சில் விளையாட முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். எனவே அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் உஸ்மான் தாரிக் இந்திய அணிக்கு எதிராக ஒரு பிரச்சினையாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -