இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் மக்முத் இந்திய மண்ணில் எந்த வெளிநாட்டு பந்து வீச்சாளரும் செய்யாத சாதனையை செய்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவிற்கு சென்று வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகள் விளையாட வேண்டும் என்கின்ற காரணத்தினால்,தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹசன் மக்முத் தந்த முதல் திருப்பம்
பங்களாதேஷ் அணி இன்று மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. டஸ்கின் அஹமத் மற்றும் நாகித் ராணா இருவரும் வேகப்பந்துவீச்சிக்கு சாதகமான சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர்கள் மிகவும் ஷார்ட்டாக பந்தை வீசி வீணடித்தார்கள்.
அதே சமயத்தில் இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் ஹசன் மக்முத் கண்டிஷனை பயன்படுத்தி பந்தை நன்றாக மேலே வீசி ரோஹித் சர்மா, கில் மற்றும் விராட் கோலி விக்கெட்டுகளை பத்து ஓவர்கள் முடிவதற்குள்ளாக கைப்பற்றினார். மேலும் அவர் பத்து ரன்கள் கொடுப்பதற்குள் இந்த மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி விட்டார்.
யாரும் செய்யாத சாதனை
இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 10 ஓவர்களில் 10 ரன்கள் கூட தராமல் மூன்று விக்கெட் கைப்பற்றிய முதல் வெளிநாட்டு பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையை மக்முத் ஹசன் படைத்திருக்கிறார். 14 வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தின் கிறிஸ் மார்ட்டின் முதல் 10 ஓவர்களில் 10 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட் கைப்பற்றியது இந்த வகையில் சாதனையாக இருந்தது.
இதையும் படிங்க : 6 சிக்ஸ் நான் அடிச்சு முடிச்சதும்.. தோனி என் கிட்ட இதத்தான் சொன்னார் – யுவராஜ் சிங் வெளியிட்ட தகவல்
மேலும் மதிய உணவு இடைவேளை முடிந்து திரும்பி வந்த இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் விக்கட்டை 39 ரன்கள் வீழ்த்தி மீண்டும் ஹசன் மக்முத் அதிர்ச்சி கொடுத்தார். அதே சமயத்தில் இந்த போட்டியில் டக் அவுட் ஆன கில் ஒரு காலண்டர் இந்திய மண்ணில் மூன்று முறை டக் அவுட் ஆன விராட் கோலி பட்டியலில் இணைந்தார்.