141 பந்துகளில் 277 ரன்கள்; புதிய உலக சாதனை படைத்த தமிழக வீரர் ஜெகதீசன்!

0
1401

தமிழக வீரர் ஜெகதீசன் விஜய் ஹசாரே தொடரில் 277 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.

விஜய் ஹசாரே தொடரில் நடைபெற்று வரும் லீக் சுற்றில், சி பிரிவில் தமிழக அணி இடம் பெற்று இருக்கிறது. 5 போட்டிகளில் முடிவில் நான்கு வெற்றிகள் மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து ஆனதையடுத்து, 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது

- Advertisement -

தமிழக அணி தனது ஆறாவது போட்டியை அருணாச்சலப்பிரதேசம் அணிக்கு எதிராக இன்று விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணிக்கு சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஜெகதீசன் 79 பந்துகளில் சதம் அடித்தார். விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக இவர் அடிக்கும் ஐந்தாவது சதம் இதுவாகும். இதன் மூலம் புதிய உலக சாதனையை முதலில் படைத்தார்.

இந்த சீசனில் 600 ரன்கள் கடந்து அதிலும் சாதனை படைத்திருக்கிறார். மேலும், ஒரு சீசனில் இதுவரை தனி நபர் அடித்தது , நான்கு சதங்கள் மட்டுமே அதிகபட்சமாக இருந்தது. தற்போது ஐந்தாவது சதம் அடித்ததன் மூலம் அதிலும் ஜெகதீசன் சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

அருணாச்சலப்பிரதேசம் அணியுடனான போட்டியில் இடைவிடாமல் பேட்டிங் செய்த ஜெகதீசன் இரட்டை சதம் அடித்து மேலும் புதிய பல வரலாறுகளைப் படைத்திருக்கிறார். ஜெகதீசன் இத்துடன் நிற்கவில்லை. அதன் பிறகு தான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்சர்களாக விலாசி 250 ரன்கள் கடந்தார்.

இறுதியில் 141 பந்துகளில் 277 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இதில் 15 சித்தர்கள் மற்றும் 25 பவுண்டரிகள் அடங்கும்.

சர்வதேச போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகள் (லிஸ்ட்-ஏ) அனைத்தையும் வைத்து பார்க்கையில், ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடித்து, தற்போது ஒரு இன்னிங்ஸில்(50 ஓவர்கள்) அதிக ரன்களை அடித்தவர் என்ற சாதனையை தன் வசப்படுத்தினார்.

லிஸ்ட்-ஏ போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:

  1. என் ஜெகதீசன் – 277 ரன்கள் (இன்று)
  2. அலி பிரவுன் – 268 ரன்கள்
  3. ரோஹித் சர்மா – 264 ரன்கள்
  4. டி’ஆர்க்கி ஷாட் – 257 ரன்கள்
  5. ஷிகர் தவான் – 248 ரன்கள்