இந்திய கிரிக்கெட்

25 ரன்.. ஒரே இன்னிங்ஸில் வென்ற தமிழக அணி.. புள்ளி பட்டியலில் முதலிடம்.. ரஞ்சி டிராபி 2024

நடப்பு ரஞ்சி டிராபி சீசனில் ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது பிரிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

- Advertisement -

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற தமிழக அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த ரயில்வேஸ் அணிக்கு பார்கவ் மேராய் 53, சுராஜ் அகுஜா 60 ரன்கள் எடுக்க, அந்த அணி 229 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தமிழக தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட் கைப்பற்றினார்.

பேட்டிங்கில் கலக்கிய தமிழக அணி

இதைத்தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 448 ரன்கள் குவித்தது. ஷாருக்கான் 86, முகமது அலி 96 ரன்கள் எடுத்தார்கள். ரயில்வேஸ் அணியின் தரப்பில் குணால் யாதவ் நான்கு கைப்பற்றினார். அணிக்கு 200க்கும் மேற்பட்ட ரன்கள் முன்னிலை கிடைத்தது. இதனால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.

இதைத்தொடர்ந்து பின்தங்கிய நிலையில் விளையாடிய ரயில்வே சனி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 184 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதனால் தமிழக அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் பேட்டிங் செய்து இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிழக அணியின் தரப்பில் பந்து வீச்சில் சோனு யாதவ் மற்றும் அஜித் ராம் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

தமிழக அணி புள்ளி பட்டியலில் முதல் இடம்

இந்திய அணி எலைட் டி பிரிவில் இடம் பெற்று இருக்கிறது. இதில் தமிழக அணியுடன் சண்டிகர், டெல்லி, ரயில்வேஸ், சௌராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் அசாம் என மொத்தம் எட்டு அணிகள் இருக்கின்றன. தற்போது இந்த பிரிவில் எல்லா அணிகளும் 5 போட்டிகள் விளையாடி முடித்து மீதம் 2 போட்டிகள் இருக்கும் நிலையில், தமிழக அணியும், சண்டிகர் அணியும் ஒரே புள்ளிகள் எடுத்திருக்கின்றன. ஆனால் ரன் ரேட் அடிப்படையில் தமிழக அணி முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இதையும் படிங்க : ஆஸியில 3 வருட வரலாற பாருங்க.. இந்திய அணியால இங்க ஜெயிக்க முடியாது.. காரணம் இதான் – டிராவிஸ் பேட்டி

ரஞ்சி டிராபி டி பிரிவு புள்ளி பட்டியல்

தமிழ்நாடு – 19
சண்டிகர் – 19
டெல்லி – 14
ரயில்வேஸ் – 14
சௌராஷ்டிரா – 11
சத்தீஸ்கர் – 11
ஜார்க்கண்ட் – 8
அசாம் – 5

- Advertisement -
Published by

Recent Posts