438 ரன்.. ஓபனிங்கில் ஷாருக் கான் அதிரடி.. வெற்றியின் விளிம்பில் தமிழ்நாடு அணி.. ரஞ்சி டிராபி 2024

0
381
TNCA

நடப்பு ரஞ்சி டிராபி தொடரில் ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் குவித்து வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறது.

தற்போது நடைபெற்று வருண் ரஞ்சி சீசனில் தமிழ்நாடு அணி சௌராஷ்டிரா மாதிரியான வலிமையான அணிக்கு எதிராக வெற்றி பெற்று சிறப்பாக ஆரம்பித்தது. இந்த முறை தமிழ்நாடு அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கு சிறந்த நிலையில் இருக்கிறது.

- Advertisement -

அஜித் ராம் கலக்கல் பந்துவீச்சு

தமிழ்நாடு அணி ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ரயில்வேஸ் அணிக்கு 229 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தமிழக அணியின் தரப்பில் அஜித் ராம் சிறப்பான முறையில் பந்துவீசி நான்கு விக்கெட் கைப்பற்றி ரயில்வேஸ் அணி குறைந்த ரன்னில் சுருளுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழக அணிக்கு ஷாருக் கான் துவக்க வீரராக அனுப்பப்பட்டார். அவர் தன்னுடைய பாணியில் அதிரடியாக விளையாடி 114 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 86 ரன்கள் எடுத்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் விக்கெட் கீப்பர் நாராயணன் ஜெகதீசன் பொறுமையாக விளையாடி 117 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து நல்ல வலிமையான அடித்தளத்தை உருவாக்கினார்கள்.

- Advertisement -

வெற்றிக்கான வாய்ப்பில் தமிழக அணி

இதைத் தொடர்ந்து தமிழக அணியின் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் வந்த ஆன்ட்ரே சித்தார்த் 133பந்தில் 78 ரன்கள், ஆறாவது இடத்தில் வந்த முகமத் அலி 174 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார்கள். தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் குவித்தது. ரயில்வேஸ் அணியின் தரப்பில் பந்துவீச்சில் குணால் யாதவ் 5 விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : ஷமி ஐபிஎல் பவுலர் கிடையாது.. என் டீம்ல அவர் செஞ்சது விசித்திரமான ஒரு கதை – பெங்கால் கோச் பேட்டி

இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ரயில்வேஸ் அணிக்கு விவேக் சிங் 81 பந்தில் 63 ரன்கள், முகமத் சைஃப் 85 பந்தில் 52* ரன்கள் எடுத்தார்கள். மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் ரயில்வேஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து 40 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. நான்கு நாள் போட்டி என்பதால் இன்னும் ஒருநாள் மீதம் இருக்கின்ற காரணத்தினால், தமிழக அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது தமிழக அணியின் தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -