ஷமி ஐபிஎல் பவுலர் கிடையாது.. என் டீம்ல அவர் செஞ்சது விசித்திரமான ஒரு கதை – பெங்கால் கோச் பேட்டி

0
247
Shukla

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வெறும் ஐபிஎல் பந்துவீச்சாளர் கிடையாது என பெங்கால் மாநில அணியின் தலைமை பயிற்சியாளர் லஷ்மி ரத்தன் சுக்லா கூறியிருக்கிறார்.

ஒரு வருடத்திற்கு பின்பு கிரிக்கெட் களத்திற்கு திரும்பி இருக்கும் ஷமி பெங்கால் அணிக்காக மத்திய பிரதேச அணிக்கு எதிராக களம் இறங்கி இரண்டு இன்னிங்ஸ்களில் இதுவரை 30 ஓவர்கள் பந்து வீசியதோடு ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியது மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் அதிரடியாக செயல்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

ஷமி பவுலிங் பேட்டிங் அசத்தல்

சரியாக ஒரு வருடத்திற்கு பின்பு ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக பெங்கால் அணிக்காக ஷமி விளையாட வந்தார். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 19 ஓவர்கள் பந்து வீசி நான்கு விக்கெட் கைப்பற்றினார். மேலும் பேட்டிங்கில் அதிரடியாக 36 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் 11 ஓவர்கள் பந்து வீசி இருக்கிறார். இதில் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருக்கிறார். ஒரு வருடம் கழித்து கிரிக்கெட் களத்திற்கு நேரடியாக திரும்பிய அவரது விளையாட்டு செயல்பாடு பெங்கால் அணியின் தலைமை பெயர்ச்சியாளர் லஷ்மி ரத்தன் சுக்லாவை வியக்க வைத்திருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் பவுலர் கிடையாது

ஷமி குறித்து லஷ்மி ரத்தன் சுக்லா கூறும்பொழுது “ஷமி முதல் இன்னிங்ஸில் ஒரு ஆறு ஓவர் ஸ்பெல் மற்றும் ஐந்து ஓவர் ஸ்பெல் என இரண்டு நீண்ட ஸ்பெல்லை வீசினார். ஐபிஎல் பவுலர்களுக்கு நான்கு ஓர்களுக்கு மேல் பந்து வீசத் தெரியாது. ஒரு வேகப்பந்துவீச்சாளரிடம் என்ன எதிர்பார்ப்புகள் இருக்குமோ அந்த வகையில் அவர் பந்து வீசினார். ஒரு வருடத்திற்குப் பின்பு வந்த அவர் வலிமையாக திரும்பி வந்தார். இது ஒரு விசித்திர கதை போல இருக்கிறது”

இதையும் படிங்க : ஆஸி டெஸ்ட் தொடர்.. இந்த ஒரு இந்திய வீரர் விமானம் ஏறணும்.. அப்பதான் எல்லாம் மாறும் – ரவி சாஸ்திரி பேட்டி

“யாரோ ஒருவர் ஒரு வருடத்திற்கு பின்பு வந்து இப்படி 19 ஓவர்கள் வீசி நான்கு விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார் என்றால் இது பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர் போட்டிக்கு முன்பு எந்த சிமுலேஷன் பயிற்சியும் இல்லாமல் நேராக வந்து இதை செய்திருக்கிறார். இதைஉங்களால் கற்பனையே செய்ய முடியாது. அவர் இன்னும் தொடர்ச்சியாக விளையாடும் பொழுது மேற்கொண்டு எல்லாம் சரியாக செய்து விடுவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -