299/7.. தமிழக அணியை காப்பாற்றிய 18 வயது வீரர்.. ஷாருக்கான் சாய் கிஷோர் ஏமாற்றம்.. ரஞ்சி டிராபி 2024

0
1226
Ranji

தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் 18 வயதான ஆண்ட்ரே சித்தார்த் பொறுப்பான பேட்டிங்கால் தமிழக அணி சரிவிலிருந்து மீண்டு நல்ல நிலைக்கு வந்திருக்கிறது.

நடப்பு ரஞ்சி சீசனில் தமிழக அணி முதல் போட்டியில் வலிமையான பரோடா அணியை வென்றது. இரண்டாவது போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக வெல்ல கூடிய நிலையில் இருந்து போட்டியை டிரா செய்தது. இந்த முறை ரஞ்சி சீசன் தமிழக அணிக்கு நல்ல முறையில் ஆரம்பித்திருக்கிறது. சாய் சுதர்ஷன் இந்திய ஏ அணி உடன் இருப்பதால் அணியில் இடம் பெறவில்லை.

- Advertisement -

சிக்கலில் சிக்கிய தமிழக அணி

இன்று அசாம் கவுகாத்தி பராஸ்பரா மைதானத்தில் துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற அசாம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தமிழக அணிக்கு லோகேஸ்வர் 8, நாராயணன் ஜெகதீசன் 5, பிரதோஷ் ரஞ்சன்பால் 27 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேற தமிழக அணிக்கு நெருக்கடி உருவானது.

பலம் குறைந்த அசாம் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தால் தமிழக அணிக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் தடையை உருவாக்கலாம். எனவே இந்த போட்டியில் உடனடியாக மீண்டு வர வேண்டிய அவசியம் இருந்தது. இப்படியான நிலையில் அனுபவ வீரர் விஜய் சங்கர் மற்றும் 18 வயதான ஆன்ட்ரே சித்தார்த் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள்.

- Advertisement -

சித்தார்த்தின் பொறுப்பான ஆட்டம்

மிக முக்கியமான நேரத்தில் இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்அமைத்தது. அரை சதம் அடித்த அனுபவ வீரர் விஜய் சங்கர் 131 பந்தில் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து வந்த ஷாருக்கான் 28 மற்றும் கேப்டன் சாய் கிஷோர் 3 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதையும் படிங்க : ஐசிசி ரேங்கிங்.. 10 ஆண்டுக்கு பின் கோலிக்கு சோகம்.. ஜெய்ஸ்வால் பண்ட் ஆறுதல் – புதிய பட்டியல்

இந்த நிலையில் ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய 18 வயதான ஆன்ட்ரே சித்தார்த் 163 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 94 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். தற்போது முகமத் அலி 27 ரன்கள், சோனு யாதவ் 12 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். தமிழக அணி 7 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் முதல் நாள் முடிவில் எடுத்திருக்கிறது. நாளை மேலும் தமிழக அணி 50 ரன்கள் எடுக்கும் பொழுது, முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெறவும் போட்டியை வெல்லவும் நல்ல வாய்ப்பு உருவாகி இருக்கிறது!

- Advertisement -