379 ரன்.. சாய் சுதர்ஷன் இரட்டை சதம்.. வாஷிங்டன் சுந்தர் கலக்கல் பேட்டிங்.. தமிழக அணி ரஞ்சி டிராபியில் அபாரம்

0
444
Sudharsan

நடப்பு ரஞ்சி டெஸ்ட் டிராபி தொடரில் தமிழக அணி டெல்லி அணிக்கு எதிரான தனது இரண்டாவது போட்டியில் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 379 ரன்கள் குவித்து மிகவும் வலிமையான நிலையில் இருக்கிறது.

இன்று டெல்லி மற்றும் தமிழக அணிகளுக்கு இடையேயான ரஞ்சித் டிராபி போட்டி டெல்லியின் அருண் ஜெய்ட்லி மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த முடிவு தவறு என்பதை தமிழக வீரர்கள் அடுத்த சில மணி நேரத்தில் காட்டினார்கள்.

- Advertisement -

முதல் விக்கெட் அசத்தல் பார்ட்னர்ஷிப்

இதைத் தொடர்ந்து தமிழக அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் நாராயணன் ஜெகதீசன் மற்றும் இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் இருவரும் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடியில் இருவருமே அரை சதம் அடித்து 100 ரன் பார்ட்னர்ஷிப்பை தாண்டினார்கள்.

தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி 161 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. நாராயணன் ஜெகதீசன் 101 பந்துகள் சந்தித்த விளையாடி 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தமிழக அணிக்கு வலிமையான அடித்தளம் அமைக்க நல்ல துவக்கம் கிடைத்தது.

- Advertisement -

இரண்டாவது விக்கெட் மெகா பார்ட்னர்ஷிப்

இதைத்தொடர்ந்து சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடி அதிரடியில் மிரட்டியது. மிகச் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் சதம் அடித்ததோடு நிற்காமல் 150 ரன்கள் தாண்டி தனது இரட்டை சதத்தையும் அடித்து அசத்தினார். இந்த ஜோடி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 218 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதையும் படிங்க : உண்மையில் விராட் கோலி எங்களை தண்டிச்சுட்டாரு.. ஆனா அந்த விஷயம் நாங்க ஜெயிக்க போதும் – ரச்சின் ரவீந்தரா பேட்டி

தமிழக அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 379 ரன்கள் எடுத்து இருக்கிறது. தமிழக அணியின் தரப்பில் சாய் சுதர்ஷன் 259 பந்துகளில் 23 பவுண்டரிகள், 1 சிக்சர் உடன் 202, வாஷிங்டன் சுந்தர் 170 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்சர் உடன் 96 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். தமிழக அணி முதல் போட்டியில் வலிமையான பரோடா அணியை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -