உண்மையில் விராட் கோலி எங்களை தண்டிச்சுட்டாரு.. ஆனா அந்த விஷயம் நாங்க ஜெயிக்க போதும் – ரச்சின் ரவீந்தரா பேட்டி

0
62
Rachin

இந்திய அணியின் அனுபவமிக்க நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இன்று பேட்டால் தங்களை தண்டித்து விட்டதாக நியூஸிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா கூறியிருக்கிறார்.

இந்திய அணி இன்று போட்டியின் மூன்றாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்கள் மூன்று விக்கெட் இழப்புக்கு எடுத்திருக்கிறது. இன்றைய போட்டியின் கடைசி பந்தில் விராட் கோலி 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக போட்டி சுவாரசியமான கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது.

- Advertisement -

சொந்த நகரத்தில் சாதித்த ரச்சின் ரவீந்தரா

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் மட்டுமே எடுத்து சுருள, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் எடுத்தது. ரச்சின் ரவீந்திர அதிரடியாக விளையாடி 157 பந்துகளில் 134 ரன்கள் எடுத்தார். இவரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக நியூசிலாந்து அணி வெற்றிக்கான வாய்ப்பை அதிகரித்தது.

மேலும் ரச்சின் ரவீந்தராவுக்கு பெங்களூரு பிறந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று அவரது தந்தை மற்றும் உறவினர்கள் சிலர் அவர் விளையாடுவதை பார்ப்பதற்கு நேரடியாக மைதானத்திற்கு வந்திருந்தார்கள். இந்த நிலையில் சதம் அடித்தது அவருக்கு மிகவும் உற்சாகமான ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி தண்டித்து விட்டார்

இன்றைய நாள் முடிவுக்குப்பின் பேசிய ரச்சின் ரவீந்தரா கூறிய போது “நான் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க விரும்புகிறேன். சவுதியுடன் நான் உருவாக்கிய பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. மேலும் எங்களுடைய நோக்கம் தெளிவாக இருந்தது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.பெங்களூர் விக்கெட் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. மேலும் சுற்றுப்புறத்தை அறிந்து வைத்திருப்பது நன்றாக அமைந்திருக்கிறது”

இதையும் படிங்க : 231 ரன்.. கடைசி பந்தில் நடந்த சோகம்.. விராட் கோலி சர்பராஸ் கான் போராட்டம்.. இந்திய அணி வெல்லுமா?

“இந்த ஆடுகளம் விளையாடுவதற்கு அழகாக இருக்கிறது. மேலும் எனது அப்பா இங்கே இருப்பது அருமையானதாக இருக்கிறது. இது அவருடைய சொந்த ஊர். இங்கு அவருக்கு தற்பொழுதும் உறவினர்கள் நிறைய இருக்கிறார்கள். எனக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட் முழுவதும் அதற்காக நான் கொடுத்திருக்கிறேன். விராட் கோலி மிகவும் சிறப்பான பேட்ஸ்மேன். உண்மையில் இன்று அவர் தனது சிறப்பான பேட்டிங் மூலம் எங்களை தண்டித்திருக்கிறார். இருந்த பொழுதும் எங்கள் கைவசம் ரன்கள் இருக்கிறது எனவே வெற்றி பெற முடியும்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -