கோலி கொடுத்த அட்வைஸ்தான்.. இப்ப புஜாராவை தூக்க ஹெல்ப் பண்ணுச்சு – தமிழக வீரர் குர்ஜப்நீத் சிங் பேட்டி

0
151
Pujara

நடப்பு ரஞ்சி சீசனில் சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீரர் புஜாரா விக்கட்டை கைப்பற்ற விராட் கோலி தந்த அறிவுரை முக்கிய காரணமாக இருந்தது என தமிழக வீரர் குர்ஜப்நீத் சிங் கூறியிருக்கிறார்.

சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 14 ஓவர்கள் வந்து வீசி 5 மெய்டன்கள் செய்து 22 ரன்கள் மட்டுமே தந்து ஆறு முக்கிய விக்கெட்டுகளை தமிழக வீரர் குர்ஜப்நீத் சிங் கைப்பற்றினார். சௌராஷ்ட்ரா அணி 94 ரன்களில் சுருள, தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

பங்களாதேஷ் தொடருக்கு முன்பான சம்பவம்

பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி தயாராக அதற்கான பயிற்சி முகாமில் விராட் கோலிக்கு தமிழக இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான குர்ஜப்நீத் சிங் பந்துவீசி இருக்கிறார். அப்போது விராட் கோலிக்கு பந்து வீசிய தன்னுடைய அனுபவம் குறித்து, இன்று சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று ஆட்டநாயகன் விருது கைப்பற்றிய பிறகு அவர் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து கூறியுள்ள குர்ஜப்நீத் சிங் பேசும்பொழுது ” நான் அந்த பயிற்சி முகாமில் விராட் கோலியை போல்ட் செய்தேன். அந்தப் பந்தை வீசிய பிறகு நான் அவரை திரும்பிப் பார்த்தேன். ஆனால் அதற்குப் பிறகு அவரை திரும்பி பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை. ஏனென்றால் அவர் அளவு கடந்த கோபத்தில் இருந்தார். பிறகு என்னுடைய பந்தில் நேராக ஒரு ஸ்ட்ரெயிட் டிரைவ் அடித்தார். பிறகு அவர் உடனே சகஜமான நிலைமைக்கு திரும்பினார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

புஜாராவை தூக்க விராட் கோலி அட்வைஸ்

மேலும் பேசிய குர்ஜப்நீத் சிங் “அப்போது விராட் கோலி என்னிடம் நேராக வந்து பந்து வீசும் பொழுது ஆடுகளத்தில் எந்த விதமான மூவ்மென்ட் இல்லை என்றால், ரவுண்ட் த ஸ்டெம்ப் வந்து வீசும் பொழுது சிறிது மூவ்மென்ட் கிடைக்கும் என்றும், அது பேட்ஸ்மேன்களை செய்த தொந்தரவு செய்யும் என்றும் கூறினார். இன்று விராட் கோலி தந்த அந்த அறிவுரைப்படியே நான் புஜாராவுக்கு பந்துவீசி அவரை டக் அவுட் செய்தேன்”

இதையும் படிங்க :டி20 உலக கோப்பை பைனல் தோல்வி.. அதுக்கு மேல ஆட மனசே இல்ல.. எல்லாம் தீர்ந்தது – ஹென்றி கிளாசன் பேட்டி

“புஜாரா போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேனுக்கு எதிராக நீங்கள் பந்து வீசும் போது எல்லாவற்றிலும் துல்லியமாக இருக்க வேண்டும். நான் முதலில் அவரை பின்காலில் தள்ளுவதற்காக ஒரு பவுன்சர் வீசினேன். பிறகு அவரை முன் காலில் கொண்டுவர ஒரு பந்தை வீசினால் அது சிரமப்படுத்தும் என்று வீசினேன். பிறகு நான் விராட் கோலி அறிவுரைப்படி பந்தை இந்த பக்கத்தில் இருந்து எடுத்து அவரை எல்பிடபிள்யு செய்தேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -