13 ஃபோர்ஸ்.. 7 சிக்ஸ்.. தமிழ்நாடு அணி கேப்டன் ஷாருக்கான் அதிரடி சதம்.. ரிங்கு சிங் போராட்டம் வீண்.. விஜய் ஹசாரே டிராபி 2024

0
1819

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி 2024-25 சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் குரூப் டி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேச அணிகள் விளையாடின. இதழ் தமிழ்நாடு அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

விஜய் ஹசாரே டிராபி 2024 – 25

ஒரு நாள் தொடர் வடிவில் நடைபெறும் விஜய் ஹசாரே டிராபி தொடரின் மூன்றாவது சுற்று ஆட்டத்தின் குரூப் டி பிரிவில் தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற உத்தரப்பிரதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மேலும் இந்தப் போட்டி மழையால் சிறிது நேரம் பாதிக்கப்பட மூன்று ஓவர்கள் குறைத்து 47 ஓவர்களாக அறிவிக்கப்பட்டது. இதன் படி தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் டக் அவுட் ஆகி வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் துஷார் ரஹிஜா 15 ரன்னில் நடையை கட்டினார்.

அதற்குப் பின்னர் இந்திரஜித் 27 ரன், விஜய் சங்கர் 16 ரன்னில் ஆட்டமிழக்க அதற்கு பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷாருகான் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டார். அவருக்கு பக்கபலமாக முகமது அலி விளையாட இந்த ஜோடி 151 பந்துகளில் 216 ரன்கள் குவித்தது. இதில் அணியின் கேப்டன் ஷாருகான் அபாரமாக விளையாடி 85 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 13 பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர் என 132 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் முகமது அலி 76 ரன் குவிக்க இறுதியாக தமிழ்நாடு அணி 47 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தமிழ்நாடு அணி சிறப்பான வெற்றி

அதற்குப் பின்னர் வெற்று இலக்கை நோக்கி உத்தர பிரதேச அணி களம் இறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் கோஸ்வாமி 14 ரன் மற்றும் ஆரியன் ஜோயல் 8 ரன்னில் வெளியேற, மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் கரண் ஷர்மா எட்டு ரன்னில் நடையை கட்டினார். அதற்குப் பின்னர் ஐபிஎல் புகழ் நித்திஷ் ராணா 17 ரன் எடுத்த நிலையில் வெளியேற, உத்தரப்பிரதேச அணியின் கேப்டன் ரிங்கு சிங், பிரியம் கார்க் ஆகியோர் ஓரளவு நிலைத்து நின்று விளையாடினார்கள்.

இதையும் படிங்க:145 ரன்.. சீன் வில்லியம்ஸ் சாதனை சதம்.. ஆப்கன் டெஸ்ட் தொடர்.. 4 ஜிம்பாப்வே வீரர்கள் சிறப்பான பேட்டிங்.. முழு விவரம்

இதில் பிரியம் கார்க் 49 பந்தில் 48 ரன், கேப்டன் ரிங்கு சிங் 43 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 55 ரன் குவித்த நிலையில் வெளியேற அதற்குப் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததால் உத்தரப்பிரதேச அணி இறுதியாக 32.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன் மட்டுமே எடுத்தது இதனால் தமிழ்நாடு அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. பந்து வீச்சில் சந்திப் வாரியர், வருண் சக்கரவர்த்தி மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -