“இருக்கிற வேகத்தை எடுத்துட்டு போய்.. இந்தியாகிட்ட காட்ட வேண்டியதுதான்!” – டேவிட் மில்லர் அதிரடி பேட்டி!

0
6712
Miller

நடப்பு உலகக் கோப்பை தொடரில் கடைசி மிக முக்கியமான போட்டியாக இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி அமைந்திருக்கிறது.

காரணம் இந்த இரண்டு அணிகளும் தற்போது மிகச் சிறப்பாக இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் மூன்று துறைகளிலும் சமமான பலத்தை பெற்று சீரான அளவில் வெற்றி பெற்று வருகிறது.

அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்க அணி அதிரடியான முறையில் வெற்றிகளை பேட்டிங்கில் பெற்று வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்குமான வித்தியாசம் இதுவாகத்தான் இருக்கிறது.

இந்த இரு அணிகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சந்திக்கின்றன. இந்தப் போட்டியில் வெல்லும் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் லீக் சுற்றை முடிக்கும் என்று நம்பலாம்.

- Advertisement -

இந்த போட்டி குறித்து பேசி உள்ள தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் கூறும் பொழுது “கொல்கத்தாவில் இது மிகப் பெரிய ஒரு சந்தர்ப்பமாக இருக்கும். இரு அணிகளும் நல்ல பார்மில் இருக்கின்றன. இந்தியா போட்டியை நடத்தும் நாடு மற்றும் உலக கோப்பையை வெல்ல பெரிய பேவரைட் ஆக இருக்கும் நாடு. எனவே இப்படியான அணிக்கு எதிராக நாங்கள் எங்கள் உத்வேகத்தை தொடர பெரிதும் விரும்புகிறோம்.

இந்தியாவில் விளையாடிய அனுபவம் எங்கள் அணியின் பல வீரர்களுக்கு ஐபிஎல் தொடரால் கிடைத்திருக்கிறது. மேலும் கிரிக்கெட் விளையாட இந்தியாவை விட மிகச்சிறந்த இடம் எதுவும் கிடையாது. மைதானத்துக்குள் வந்ததிலிருந்து கிரிக்கெட் விளையாடுவதற்கான ஆர்வத்தை உணர முடியும். இந்திய ஆதரவாளர்கள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள் மற்றும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

தனியாக போட்டியை வெல்லக்கூடிய ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா போன்ற வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். நாங்கள் ஏற்கனவே நிறைய முறை எதிராக விளையாடி இருக்கிறோம். எனவே எங்கள் ஒவ்வொருவரை பற்றியும் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஹர்திக் பாண்டியா உடன் நான் நன்றாக பழகுகிறேன். ஐபிஎல் தொடரில் அவருடன் ஒரே அணியில் நான் நேரம் செலவிட்டிருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

இந்த போட்டியில் தோற்கும் அணி அரை இறுதியில் மும்பை மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட வேண்டியது வருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!