வீடியோ: வார்னரிடம் டி-சர்ட் கேட்ட சிறுவனுக்கு, டி-சர்ட் மட்டும் இல்லை இதையும் சேர்த்து வச்சுக்கோ என எழுதி காட்டிய வார்னர்!

0
389

வார்னர் உங்க டி-சர்ட் கிடைக்குமா? என கேட்ட சிறுவனுக்கு அப்போதே எழுதி காட்டிய வார்னரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

டி20 உலககோப்பைக்கு பிறகு, ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. நவம்பர் 17ம் தேதி முதல் ஒரு நாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு டேவிட் மலான் அதிரடியை வெளிப்படுத்தி சதம் விலாசினார். இவர் 128 பந்துகளில் 134 ரன்கள் அடிக்க, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 287 ரன்கள் அடித்திருந்தது.

இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர் மற்றும் டிராவிஸ் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தனர். டிராவிஸ் 69 ரன்களுக்கும், டேவிட் வார்னர் 86 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஸ்மித் 80 ரன்களும், கேமரூன் கிரீன் 20 ரன்கள் அடித்து களத்தில் நிற்க, ஆஸ்திரேலியா அணி 46.5 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

சுவாரஸ்யமான சம்பவம்!

போட்டியின் நடுவே மைதானத்தில் இருந்த சிறுவன், “வார்னர் உங்கள் டி-சர்ட் கிடைக்குமா?” என எழுதி கேமரா முன் காட்டினான். அதை பெரிய ஸ்க்ரீனில் பார்த்த வார்னர், உடனடியாக சிரித்தபடி இன்னொரு பேப்பரில், “மார்னஸ் டி-சர்ட்டும் சேர்த்து வாங்கிக்கோ” என காட்டி சிரித்தார்.

இதை அருகில் அமர்ந்திருந்த மற்றொரு ஆஸி., வீரர் மார்னஸ் லபுச்சானே சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். இந்த ஒட்டுமொத்த நிகழ்வின் வீடியோ இணையத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.