டி20 உலககோப்பை 2024.. இந்தியா வழியில் திரும்பிய இலங்கை.. புது ப்ளான் பலன் தருமா!

0
247
Srilanka

ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் என இரண்டு வடிவங்களில் உலகக் கோப்பையை கைப்பற்ற அணியாக இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக அவர்களது நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் காரணமாக நெருக்கடியான நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது அவர்கள் நாட்டின் கிரிக்கெட்டையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக உலக சாம்பியன் அணியான இலங்கை உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு தகுதிச் சுற்றில் பங்கேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

கடந்த வருட இறுதியில் நடைபெற்று முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து, பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சாம்பியன் டிராபி தொடரில் பங்கு எடுப்பதற்கான தகுதியை இழந்தது.

இந்த நிலையில் இந்த வருடம் மத்தியில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு இலங்கை அணியை பலப்படுத்தும் விதமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இதன்படி வனிந்து ஹசரங்கா புதிய கேப்டனாக இலங்கை டி20 அணிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இத்துடன் இலங்கை டி20 அணியில் மூன்று ஆண்டுகளாக இடம்பெறாத மூத்த வீரர் அஞ்சிலோ மேத்யூஸ் மீண்டும் இடம்பெற்று இருக்கிறார். மெதுவான ஆடுகளங்களை கொண்ட வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் t20 உலக கோப்பையை சந்திக்க அஞ்சலோ மேட்ச் போன்ற அனுபவ வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நம்புகிறது.

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இதைக் காரணமாக வைத்து அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் மீண்டும் இந்திய டி20 அணிக்கு கொண்டு வந்தது. தற்பொழுது இலங்கையும் இதே வழியில் திரும்பி அஞ்சலோ மேத்யூசை கொண்டு வந்திருக்கிறது.

உள்நாட்டில் ஜனவரி 14 முதல் 18ஆம் தேதி வரையில் நடக்க இருக்கின்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணியின் புதிய முடிவுகள் அமல்படுத்தப்பட இருக்கின்றன.

வனிந்து ஹசரங்க(கே), சரித் அசலங்கா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, குசல் ஜனித் பெரேரா, ஏஞ்சலோ மத்தியூஸ், தசுன் ஷனகா. தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், பதும் நிஸங்க -மகேஷ் தீக்ஷனா. துஷ்மந்த சமீர, தில்ஷான் மதுஷங்க, மதீஷா பத்திரன, நுவன் துஷார, அகில தனஞ்சய.