டி20 உலககோப்பை 2024.. முடிவான மாஸ் இந்திய பிளேயிங் லெவன்.. கப் அடிக்கும் போல!

0
525
ICT

இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜனவரி 11ஆம் தேதி முதல் தொடங்கி விளையாட இருக்கிறது.

இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு தொடரில் விளையாடுகிறது. மேலும் இந்தத் தொடரே டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச டி 20 தொடராகும்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இன்று ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்கு திரும்புவார்களா என்கின்ற கேள்வி இருந்தது. தற்பொழுது இவர்கள் இருவருமே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணிகள் இடம் பெற்று இருப்பதால், மேற்கொண்டு நிறைய கேள்விகளுக்கு பதில் தெரிந்திருக்கிறது.

இன்னொரு முக்கிய விஷயமாக இஷான் கிஷான் இடத்தில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். இதன் மூலம் மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக கில் தொடர்கிறார் என்று முடிவாகிறது.

- Advertisement -

மேலும் காயம் குணமடைந்ததும் சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இந்திய டி20 அணிக்குள் வந்துவிடுவார்கள். இவர்கள் வரும்பொழுது தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ள சிவம் துபே மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக நீக்கப்பட்டு விட்டார். மேலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் காயத்தில் இருக்கும் ருத்ராஜும் இடம்பெறவில்லை. இவர்கள் மூவருமே இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற மாட்டார்கள் என்பதாகவே தெரிகிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றுள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான் மற்றும் முகேஷ் குமார் மூவரில் இருவர் மட்டுமே இடம்பெற அதிக வாய்ப்பு உண்டு. பும்ரா எப்படியும் வந்து விடுவார். மேலும் சுழற் பந்துவீச்சாளர்களாக அக்சர் படேல், ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ் மூவரும் இருப்பார்கள்.

டி20 உலகக் கோப்பை அமைக்கப்பட வாய்ப்பு இருக்கும் உத்தேச இந்திய பிளேயிங் லெவன்

ரோகித் சர்மா, ஜெயசுவால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஸ்னாய், பும்ரா மற்றும் அர்ஸ்தீப்.

ஒருவேளை கூடுதல் பேட்ஸ்மேன் திலக் வர்மா தேவை இல்லை என்றால், அவருடைய இடத்தில் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் இல்லை வேறு ஒரு வேகப்பந்துவீச்சாளர் இடம் பெறலாம். மொத்தத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க ஆடுகளங்களுக்கு தேவையான நல்ல பிளேயிங் லெவன் இந்திய அணியிடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!