தற்பொழுது சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் டி20 வடிவத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் முதல் முறையாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு கிரிக்கெட் அணிகளை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
இந்த நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதலில் நடைபெற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
தற்போது ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவுக்கு நேரடியாக கால் இறுதியில் மோதிக் கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது சிறிய அணிகள் லீக் சுற்றில் மோதி வருகின்றன.
இதில் இன்று நேபாள் மற்றும் மங்கோலியா அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. அனுபவம் அற்ற மங்கோலியா அணியின் வந்து வீச்சை நொறுக்கி தள்ளி நேபாள் பல உலக சாதனைகளை தன் வசப்படுத்தி இருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணி 20 ஓவர்களில் 314 ரன்களை மூன்று விக்கெட் இழப்புக்கு குவித்தது. குஷால் புருடல் 19(23), ஆசிப் சேக் 16(17), குஷால் மல்லா 137*(50), ரோகித் பவுடெல் 61(27), திபேந்திர சிங் ஆரே 52(10) ஆகியோர் அதிரடியாக ரன்கள் குவித்தார்கள்.
இந்தப் போட்டியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நேபாள் அணி செய்துள்ள உலக சாதனைகள் :
டி20 கிரிக்கெட்டில் முதல் அணியாக 300 ரன்களை தொட்டது.
டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களாக 314 ரன்களை பதிவு செய்தது.
டி20 கிரிக்கெட்டில் 34 பந்துகளில் அதிவேக சதம் குசால் மல்லா.
டி20 கிரிக்கெட்டில் திபேந்திர சிங் ஆரே 9 பந்துகளில் அதிவேக அரைசதம்.
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் என 26 சிக்ஸர்கள் அடித்தது.
30 மற்றும் 50 ரன்களை அதிவேக ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தது. திபேந்திர சிங் ஆரே 520 ஸ்ட்ரைக் ரேட்.
டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் ஜெயித்தது 273 ரன்கள்.
மேலும் ஆறு சிக்ஸர்களை தொடர்ச்சியாக அடித்தது.
தொடர்ந்து விளையாடிய மங்கோலியா அணி 13.1 ஓவரில் 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் மட்டும் ஏழு உலகச் சாதனைகளை நேபாள் அணி டி20 கிரிக்கெட்டில் செய்திருக்கிறது!