ஆண்டின் ஆரம்பத்தில் அணிக்கு வெளியே; தற்போது டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ள 4 வீரர்கள்!

0
383
Indisn cricket team

இந்திய டி20 கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு யு.ஏ.இ-ல் நடந்த உலகக்கோப்பையில் முதல்சுற்றோடு தோற்று வெளியேறியது. இதற்கடு அடுத்து தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும், கேப்டனாக ரோகித் சர்மாவும் வர, பல புதிய முகங்கள் இந்திய டி20 அணியில் தென்பட ஆரம்பித்தன!

இந்த ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான ஒரு அணியை உருவாக்குவதில் ராகுல் டிராவிட் – ரோகித் சர்மா கூட்டணி தீவீரமாய் இறங்கியது. இதனால் சில புதிய வீரர்களும், பழைய வீரர்களும் அணிக்கு அழைக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்!

- Advertisement -

இந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அணியின் அருகிலேயே இல்லாது, ஆனால் ஐபிஎல் தொடருக்குப் பின் அணிக்குள் வந்து, தற்போது டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ள நான்கு வீரர்களை யார் யாரென்றுதான் இந்தக் கட்டுரை தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்!

தினேஷ் கார்த்திக்:

18 வருடங்களாக கிரிக்கெட்டில் தன்னை நிரூபிக்க போராடி வந்த தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த வருட ஐபிஎல் தொடர் மிகப்பெரிய திருப்புமுனையாய் அமைந்தது. இதையடுத்து செளத்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட்இன்டீஸ் என நான்கு டி20 தொடர்களில் தொடர் வாய்ப்பை பெற்றவர், பேட்டிங்கில் ஒரு பினிசராய் இரண்டு முறை ஆட்டநாயகன் விருதுபெற்று அசந்தி இருக்கிறார்.கடந்த ஆண்டில் கிரிக்கெட் கமெண்ட்டேட்டராக இருந்து, இன்று டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதிற்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறார்.

- Advertisement -

ஹர்திக் பாண்ட்யா:

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் இலண்டனில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹர்திக் பாண்ட்யா, கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார். ஆனால் பழையபடி அவரால் தன் ஆல்ரவுண்டிங் பர்பாமென்சை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து அணியில் தன்னைத் தேர்வு செய்யவேண்டாம் என்று வெளியேறி, உடற்தகுதியை சரிசெய்து, ஐபிஎல் தொடருக்குத் திரும்பி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன், பேட்ஸ்மேன், பவுலர் என்று முப்பரிணாமத்தில் அசத்தி கோப்பையையும் வென்று தந்தார். இதற்குப் பிறகு அணியில் இந்திய இடம்பெற்ற இவர், இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரிலும் களமிறங்கி உடற்தகுதியின் தரத்தைக் காட்டினார். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டாராய் ஹர்திக் பாண்ட்யா டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் போட்டியின்றி தேர்வாகிறார்.

அர்ஷ்தீப் சிங்:

பஞ்சாப்பை சேர்ந்த இந்த இளம் இடக்கை வேகப்பந்த வீச்சாளர் கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல் தொடரில் பலரின் கவனத்தை தன் சிறப்பான செயல்பாட்டால் ஈர்த்து வந்தார். புதுப்பந்தை இருபுறமும் ஸ்விங் செய்வது, இறுதிக்கட்ட ஓவர்களில் யார்க்கர்களில் பேட்ஸ்மேன்களை கலங்கடிப்பது, பந்துவீச்சில் கட்டர், ஸ்லோபால் வேரியசன்களை கலந்து அசத்துவதுமென பிரமிக்க வைக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணிக்கு ரொம்ப தூரத்தில் இருந்தவர். தற்போது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் அருகில் இருக்கிறார்.

தீபக் ஹூடா:

ஆப்-ஸ்பின் பார்ட்டைம் பவுலராக செயல்பட முடிந்த இந்த ரைட்ஹேன்ட் பேட்ஸ்மேன் கடந்த ஒரு வருடமாக இந்திய அணி நிர்வாகத்தின் பார்வையில் இருந்து வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக 15 போட்டிகளில் 451 ரன்கள் குவித்தவர், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் சதமடித்து அசத்தினார். இவரின் பேட்டிங் பார்மும், இவரின் பார்ட்டைம் ஆப்-ஸ்பின் பவுலிங் திறமையும் இவரை அணிக்குள் தொடர்ந்து இருத்தி வைக்கிறது. டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இவர் பெயர் இடம்பெறுவதற்கான அதிக சாத்தியங்களை உருவாக்கி இருக்கிறார்!