கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு வெளியானது!

டி-20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் துவங்க இருக்கிறது. இதற்காக உடலில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணிகளும் அதை மனதில் வைத்து கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அதிக அளவில் டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்திய அணி இதை மனதில் வைத்து ஐபிஎல் தொடருக்கு பிறகு சவுத் ஆப்பிரிக்கா அயர்லாந்து இங்கிலாந்து ஆசியக் கோப்பை என தொடர்ந்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுமட்டுமில்லாமல் உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியா மற்றும் சவுத்ஆப்பிரிக்கா அணியுடன் மீண்டும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவில் உள்நாட்டில் விளையாட இருக்கிறது.

தற்போது இந்த டி20 உலகக் கோப்பையை நடத்தும் ஆஸ்திரேலிய அணி எல்லோருக்கும் முன்னதாக நேற்று தமது உலகக் கோப்பைக்கான அணியை முதலில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து இன்று இங்கிலாந்து அணி தனது உலகக்கோப்பை அணியை அறிவித்து இருக்கிறது.

இங்கிலாந்து அறிவித்துள்ள உலகக் கோப்பை அணியில் இங்கிலாந்து அணியின் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் காயத்தில் இருந்து மீண்டு வராத காரணத்தால் அவர் சேர்க்கப்படவில்லை. மேலும் அலெக்ஸ் ஹேலும் சேர்க்கப்படவில்லை. டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் தொடர்கிறார்.

- Advertisement -

டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி :

ஜாஸ் பட்லர் ( விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் ). மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, புரூக், சாம் கரன், கிரீஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆதில் ரஷீத், பில் சால்ட், டாப்லி, டேவிட் வில்லி, வோக்ஸ் மற்றும் மார்க் வுட்.

இந்த பதினைந்து பேரைக் கொண்ட அணி தற்போது டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணியில் ரிசர்வ் வீரர்களாக க்ளேசன், டவ்சன், மில்ஸ் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்!

தற்போது இரண்டு பெரிய அணிகளின் டி20 உலகக் கோப்பைக்கான அணி விபரம் வெளியாகி இருக்கிறது. இந்திய ரசிகர்கள் தங்கள் அணியின் டி20 உலகக் கோப்பைக்கான வீரர்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள மிகப்பெரிய ஆவலாக இருக்கிறார்கள். வேகமாக ஆசிய கோப்பை தொடர் முடிந்து இந்த விபரங்கள் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது!

Published by