உலக கிரிக்கெட்டில் தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இதற்கு அடுத்து உலக நாடுகள் பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கின்றன.
நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தொடர்ச்சியாக அடுத்த தொடர்களில் விளையாட இருக்கின்றன.
நடைபெற இருக்கும் இந்த தொடர் டி20 தொடராக அமைகிறது. மேலும் இந்தத் தொடர் இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்படுகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடருக்கு கேப்டனாக இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். துணை கேப்டனாக ருத்ராஜ் இருக்கிறார்.
மேலும் சுழற் பந்துவீச்சாளர் சாகல் மற்றும் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இருவருக்கும் மீண்டும் இந்திய டி20 அணியில் வாய்ப்புகள் தரப்படவில்லை. இனி இவர்களின் கிரிக்கெட் எதிர்காலம் முடிந்தது என்று கூறப்படுகிறது.
மேலும் அறிவிக்கப்பட்ட இந்த அணியில் திலக் வர்மா, ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் ஜிகே சர்மா போன்ற இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்குள் வருகிறார். மேலும் அவர் ருதுராஜின் துணை கேப்டன் பொறுப்போடு உள்ளே வருகிறார்.
இவர் கடைசியாக 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டி20 கிரிக்கெட் இந்திய அணிக்காக விளையாடு இருந்தார். மீண்டும் ஒரு வருடம் கழித்து இவர் இந்திய டி20 அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். பொதுவாக இவர் டி20 கிரிக்கெட்டுக்கு சரிவர மாட்டார் என்பதுதான் ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.
இதற்கு தகுந்தபடியே இவரை 2021 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை விளையாடும் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கின்ற டி20 உலக கோப்பைக்கு இந்திய இளம் அணியை தயார் செய்யும் வேளையில், இவரை டி20 அணிக்குள் கொண்டு வந்திருப்பது விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!