இந்திய கிரிக்கெட் அணி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது போட்டி நாளை சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் 2026ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் வெற்றி பெறுவது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியாவில் அடுத்த டி20 உலக கோப்பை
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது. அதற்குப் பிறகு ரோகித் சர்மா டி20-ல் இருந்து விலக அந்த பொறுப்பை சூரியகுமார் யாதவ் ஏற்றார். அவரது தலைமையில் இளம் இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது.
அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இணைந்து நடத்துவதால் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் சூரியகுமார் யாதவ் வெற்றிக்கான இலக்கை அடைவது குறித்தும் அணியின் திட்டங்கள் குறித்தும் சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார். சிறிய இலக்குகளே பெரிய வெற்றிகளை அடைவதற்கான முதல் வழி என்று சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.
மஹி பாய் சொல்வது இதைத்தான்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “2024 ஆம் ஆண்டு ரோஹித் பாய் டி20 உலக கோப்பையை வெற்றி பெற்றதன் மூலம் அழுத்தத்தை கொடுத்திருக்கிறார். இது ஒரு குழு விளையாட்டு, அதனால் நாம் என்ன செய்தாலும் வெற்றி பெறுவதற்காக நாம் அமைக்கும் விதிகள், நாம் செய்யும் பயிற்சி, நாம் எந்த விஷயத்தை பற்றி விவாதித்தாலும் அது எனக்கு தான் வெற்றி. என்ன நடந்தாலும் மஹி பாய் சொல்வது போல நமது விஷயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் அதுதான் முக்கியம்.
இதையும் படிங்க:ரோஹித் அஜித் அகர்கர் எடுத்த முடிவு.. அவருக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்கும் – தினேஷ் கார்த்திக் கருத்து
என்னை பொருத்தவரை சிறிய இலக்குகளை அடைவது பெரிய வெற்றிக்கான அடித்தளம் ஆகும். அடுத்த உலக கோப்பை காண செயல்முறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்று வருகிறோம். விரைவில் அங்கு செல்வோம். நான் ஒரு கேப்டனாக இருக்க விரும்பவில்லை ஒரு தலைவனாகவே இருக்க விரும்புகிறேன். இதுதான் நான் எப்போதும் கூறும் விஷயம். ஒரு அணியாக நாம் எப்போது ஒன்றாக நிற்கின்றோமோ அப்போதுதான் வெற்றிகளை பெற முடியும். இது மைதானத்திலும் வெளியேயும் அடிப்படை விஷயங்களைப் போல நல்ல பழக்க வழக்கங்கள் ஆகும்” என்று கூறியிருக்கிறார்.