ரோஹித் அஜித் அகர்கர் எடுத்த முடிவு.. அவருக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்கும் – தினேஷ் கார்த்திக் கருத்து

0
205

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை விளையாடி முடித்த பிறகு இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் தொடரில் முகமது சிராஜ் நீக்கப்பட்டது குறித்து இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

முகமது சிராஜ் தேர்வாகவில்லை

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரை விளையாடி வரும் இந்திய அணி அதற்குப் பிறகு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக கருதப்படும் முகமது சிராஜ் இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலும் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அர்ஸ்தீப் சிங் சேர்க்கப்பட்டது நல்ல விஷயமாக தெரிந்தாலும், மற்றொரு பேக்அப் பந்துச்சாளராக ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஹர்ஷித் ரானா அதற்கு முன்பாக எந்த சர்வதேச அனுபவமும் இல்லாதவர். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் முகமது சிராஜ் போன்ற அனுபவ பந்துவீச்சாளர் இல்லாமல் புதிய வீரர் தேர்வு செய்யப்பட்டது குறித்தும் ரோகித் சர்மா மற்றும் கம்பீர் முடிவு குறித்தும் தினேஷ் கார்த்திக் சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

நிச்சயம் அவருக்கு காயத்தை உண்டாக்கி இருக்கும்

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் விரிவாக கூறும்போது ” இது வருத்தமாக இருந்தாலும் ஒரு புறம் நியாயமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இவர்கள் யாருக்காக சென்றிருக்கிறார்கள். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அற்புதமாக செயல்படும் பும்ரா, சமி, மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் முகமது சிராஜ் தேர்வு செய்யப்படாத நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஹர்ஷித் ரானா தேர்வு செய்யப்பட்டிருப்பது அவருக்கு வருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது சிராஜ் பாருங்கள், நான் அதைவிட தகுதியானவன் என்று நினைக்கிறேன். மேலும் அவருக்கு அந்த தகுதி இருப்பதால் நான் அதைவிட சிறப்பாக செயல்பட போகிறேன் என்று நினைக்கலாம்.

இதையும் படிங்க:இந்த புதிய விதி விராட் கோலிக்கு மன அழுத்தத்தையே உண்டாக்கும் – ஆஸி முன்னாள் வீரர் பேட்டி

ஆனால் சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை ரோகித் மற்றும் அஜித் அகர்கர் முடிவு நியாயமானது என்று எனக்கு தோன்றுகிறது. மேலும் உங்களுக்கு ஒரு மாற்று வேகப் பந்துவீச்சாளர் தேவை இதற்கு சிராஜ் ஒரு நல்ல தேர்வாக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். துபாயில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவது சாத்தியமல்ல. பும்ரா மற்றும் ஷமி காயத்தில் இருந்த திரும்புவதால் அவருக்கு ஒரு நல்ல பேக் அப் பந்து வீச்சாளர் தேவை. இதற்கு சிராஜ் பொருத்தமானவர்”என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -