சூர்யா இதை செய்யாதீங்க.. கிரிக்கெட்ல இப்படி ஒரு விதி இல்ல.. உலகக் கோப்பை கிடைக்காது – கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து

0
62
Surya

இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவியின் ஒரு முடிவு டி20 உலகக் கோப்பையின் போது மோசமான விளைவுகளை இந்திய அணிக்கு உருவாக்கலாம் என கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் நடைபெற்று இருக்கும் மூன்று போட்டியில் இந்திய அணி 2 போட்டியையும் ஆஸ்திரேலியா அணி 1 போட்டியையும் வென்று இருக்கிறது. இந்த நிலையில் இன்று ஐந்தாவது போட்டி நடைபெற இருக்கிறது.

- Advertisement -

சூரியகுமாரின் சிக்கல்

இந்திய கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மிகச்சிறந்த கேப்டனாக பார்க்கப்படுகிறார். களத்தில் அவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் முறையும் அதேபோல பீல்டர்களை சரியான இடங்களில் நிறுத்துவதும் மிக முக்கியமான விஷயமாக இருந்தது. சூழ்நிலைக்கு தகுந்தது போல அவர் பந்துவீச்சாளர்களை மிகச் சரியாக பத்திரப்படுத்தி பயன்படுத்துவார்.

மேலும் இதேபோல மகேந்திர சிங் தோனி ஒரு சுழல் பந்து வீச்சாளர் சிறப்பாக இருக்கிறார் என்றால் அவரை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். இதைவிட முக்கியமாக சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு தராமல் இருக்க மாட்டார். முன்கூட்டியே வாய்ப்பு தந்து அவர்களுக்கு சரியான ஐடியாவும் கொடுத்து விக்கெட் கைப்பற்ற வைத்து நம்பிக்கையை தருவார்.

- Advertisement -

சூரியகுமாரின் தவறு

தற்போது இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இடதுகை சுழல் பந்துவீச்சாளரை வலதுகை பேட்ஸ்மேன்களுக்கும், வலதுகை சுழல் பந்துவீச்சாளர்களை இடதுகை பேட்ஸ்மேன்களுக்கும் மட்டுமே பயன்படுத்துகிறார். இதன் காரணமாக வலதுகை பேட்ஸ்மேன் அதிகம் இருப்பதால் வலதுகை சுழல் பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு பந்து வீச வாய்ப்பு கொடுப்பதில்லை.

இதையும் படிங்க : அடுத்தடுத்து 3 அடி.. ரிஷப் பண்ட் உடனடி வெளியேற்றம்.. இந்திய அணிக்கு வர முடியுமா? – களத்தில் என்ன நடந்தது

ஒரே மாதிரியான பேட்ஸ்மேனுக்கு ஒரே மாதிரியான பந்துவீச்சாளர் பந்து வீசக்கூடாது என எந்த கிரிக்கெட் விதியும் கிடையாது. அப்படி வீசினால் அடித்து மிகப்பெரிய ரன்கள் எப்பொழுதும் வரும் என்பதும் கிடையாது. எனவே வாஷிங்டன் சுந்தரை தைரியமாக முன்கூட்டியே பயன்படுத்த வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அப்பொழுதுதான் வாஷிங்டன் சுந்தருக்கு நம்பிக்கை கொடுக்க முடியும், மேலும் டி20 உலக கோப்பையில் கடினமான நேரங்களில் அவரை பயன்படுத்த முடியும் என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள். இல்லையென்றால் இது முக்கியமான நேரத்தில் பெரிய பாதிப்பை கொண்டு வரலாம்.

- Advertisement -