சூர்யகுமார் இனி வாழ்க்கையில் இந்த தவறை செய்யக் கூடாது.. இந்திய அணிக்கு அது ரொம்ப முக்கியம்- உத்தப்பா கருத்து

0
51

டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் சிறந்த பேட்டிங் இடம் நம்பர் 3 என்று முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கேப்டன் நம்பர் 4க்கு கீழே பேட் செய்யக்கூடாது என்றும் அவர் கூறினார். கான்பெராவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், நம்பர் 3 இடத்தில் பேட் செய்த சூர்யகுமார் 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்தார்.

இந்தியா முதலில் பேட் செய்து 9.4 ஓவர்களில் 97/1 என்ற நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி முடிவின்றி நின்றது. இது தொடர்பாக பேசிய உத்தப்பா,”இது கல்லுக்கும் உறைக்கும் நடுவில் சிக்கிக்கொண்டது போன்ற முடிவு. செயல்திறனையும் கேப்டன்சியையும் சமன் செய்ய வேண்டிய கடினமான தேர்வு. ஆனாலும், அவர் ஒரே இடத்தில் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.”

- Advertisement -

இது தான் சிறந்த இடம்:

” டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமாருக்கு நம்பர் 3 ஐ விட சிறந்த இடம் வேறு இல்லை. முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் செட் ஆனால், அதற்குப் பிறகு எப்படி வேண்டுமானாலும் பேட்டிங் வரிசையை மாற்றி கொண்டு வரலாம். இடது, வலது காம்பினேஷன்களை அப்போது பயன்படுத்தலாம்.”

” ஆசியா கோப்பையில், இடது கை பேட்ஸ்மேன் ஆட்டமிழந்தால் திலக் வர்மா நம்பர் 3க்கு வருவார். வலது கை ஆட்டமிழந்தால் சூர்யா வருவார் என்று திட்டமிட்டிருந்தார்கள். அது இன்னும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் சூர்யகுமார் யாதவ் நம்பர் 4க்கு கீழே வரக்கூடாது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் நம்பர் 4க்கு கீழே பேட் செய்ய நிறைய சரிக்கட்டல்கள் செய்ய வேண்டியிருக்கும்” என்று அவர்  கூறினார்.

- Advertisement -

சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20க்களில் நம்பர் 4க்கு கீழே வெறும் 6 முறை மட்டுமே பேட் செய்துள்ளார். அதில் 155.55 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 140 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய கேப்டன் நம்பர் 3 இடத்தில் 29 இன்னிங்ஸ்களில் 159.22 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 820 ரன்களும், நம்பர் 4 இடத்தில் 47 இன்னிங்ஸ்களில் 167.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1,614 ரன்களும் எடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு மிக முக்கியம்:

” சூர்யகுமார் யாதவ் ஃபார்மில் இருப்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்.நீண்ட காலம் விளையாட வேண்டும் என்றால், அவர் ஒரே ஒரு ஃபார்மெட்டில் மட்டுமே விளையாடுவதால் அவரது ஃபார்மும் ரிதமும் மிக முக்கியம். இவ்வளவு முக்கியமான வீரராக இருக்கும்போது, அவரது ஃபார்ம் அணிக்கும் தனக்கும் முக்கியம்.”

இதையும் படிங்க: சூரியகுமார் ஒரு ஷாட் ஆடினதும் கதை முடிந்தது.. இல்லை கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை – ஆகாஷ் சோப்ரா பேச்சு

“இன்று அவர் நம்பர் 3க்கு வந்தது நன்றாக இருந்தது. அவர் அபாரமாக பேட் செய்கிறார். பந்தை கொஞ்சம் அகலமாக வீசினால்  பவுலரை பொளந்துவிடுவார். முதல் மழை இடைவெளிக்குப் பிறகு அதுதான் நடந்தது. அவர் ஃபார்மில் இல்லை என்று நினைக்கவில்லை. இத்தகைய கிளாஸ் வீரருக்கு இது நேரத்தின் விஷயம் மட்டுமே” என்று உத்தப்பா கூறினார். சூர்யகுமார் யாதவ் 2025ஆம் ஆண்டு 12 டி20ஐ இன்னிங்ஸ்களில் 15.44 சராசரியுடன் 139 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20யில் ஆட்டமிழக்காமல் எடுத்த 39 ரன்கள் எடுத்தது, இந்த ஆண்டு 15 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது முறை ஆகும்.

- Advertisement -