சூரியகுமார் ஒரு ஷாட் ஆடினதும் கதை முடிந்தது.. கில்லை கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
243
Surya

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் இருவர் குறித்தும் ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று என இழந்தது. இந்த நிலையில் இன்று துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. போதிலும் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் மற்றும் கில் சிறப்பாக விளையாடினார்கள்.

- Advertisement -

ஒரு ஷாட் போதும்

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” சூரியகுமார் யாதவ் வழக்கமாக விளையாடும் பகுதிகளில் அவர் ஒரு ஷாட் விளையாட ஆரம்பித்து விட்டால் எல்லா விஷயங்களும் அவருக்கு எளிதாகிவிடும். அதற்கு மேல் பந்துவீச்சாளர் அவருடைய திட்டத்தில் இருக்க முடியாது. மேலும் சூரியகுமார் விரிக்கும் வலையில் அடுத்து அவர்கள் சிக்கிக் கொள்வார்கள்”

“அவர் மேலிருந்து பேட்டை கீழே இறக்கும் சக்தி மிகவும் அதிகமானது. மேலும் நம்ப முடியாத அளவுக்கு அவருடைய கேரக்டர் சிறப்பானது. நீங்கள் ஆபத்தான ஷாட் விளையாடியும் கூட ரன் எடுக்க முடிந்தால் நீங்கள்தான் சிறந்தவர். அதனால் தான் அவர் டி20 கிரிக்கெட்டில் இத்தனை காலமாக சாதித்து வருகிறார்”

- Advertisement -

கில்லை கேள்வி கேட்க முடியாது

“கில்லை பொருத்தவரையில் அவர் ஒருநாள் தொடரின் போதும் கூட இப்படித்தான் பேட்டிங் செய்தார். பந்தை எதிர்கொள்ளும் பொழுதும் அடிக்கும் பொழுதும் மிகவும் தைரியமாக இருந்தார். சில நேரங்களில் ஆட்டம் விளக்கும் பந்தில் உங்களது பெயர் எழுதப்பட்டிருக்கும். சில நேரங்களில் நீங்கள் வேகமாக விளையாட முயற்சி செய்து ஆட்டம் இழப்பீர்கள்”

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் முன்ன மாதிரி கிடையாது.. அவர் எங்களுக்கு சொன்ன மெசேஜ் இதுதான் – சாய் சுதர்சன் பேட்டி

“தற்போது கில் மனரீதியாக டெக்னிக்கல் ரீதியாக பேட்டிங்கில் தன்னுடைய உச்சத்தில் இருக்கிறார். இந்த ஆண்டு அவருடைய ஆண்டாக இருந்து வருகிறது. நாட்டில் அவர் ரன் எடுக்க வேண்டிய தேவை இருந்த நேரத்தில் அவர் அதை செய்திருக்கிறார். இனி அணியில் அவரது இடம் பற்றியோ மற்றது பற்றியோ அவரைக் குறித்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -