நம்பர் 3வது இடத்திலிருந்து 6வது இடம் வரை.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன் சூர்யகுமார் வார்னிங்

0
161

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஓப்பனர்களைத் தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் – எந்த இடத்திலும் வேண்டுமானாலும் பேட் செய்ய எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று சூர்யகுமார் தெரிவித்துள்ளார். 2024 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதிவரை இந்தியாவின் ஓப்பனராக சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடினார்.

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சொதப்பியதாலும், சுப்மன் கில் டி20 அணிக்கு திரும்பியதாலும், சாம்சன் தற்போது கீழ் வரிசையில் பேட் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் கடைசி டி20 தொடரின் இறுதி மூன்று போட்டிகளையும் அணியில் சேர்க்கப்படவில்லை.

- Advertisement -

சாம்சனுக்கு ஒப்பனிங் கிடையாது:

அந்த இடத்தில் ஜிதேஷ் ஷர்மா விளையாடினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சூர்யகுமார் யாதவ், “சஞ்சு சாம்சனை பொறுத்தவரை, அவர் அணிக்கு வந்தபோது மேலே ஓப்பன் செய்தார். இப்போது ஓப்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் விளையாடலாம்என்று நினைக்கிறேன்.

சாம்சன் ஓப்பனிங் செய்தபோது அவர்  நன்றாக ஆடினார். ஆனால் சுப்மன் அதற்கு முன்பே இலங்கை தொடரில் ஓப்பன் செய்திருக்கிறார். அதனால் அந்த இடம் அவருக்கே உரியது. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் கொடுத்தோம். எந்த நம்பரிலும் பேட் செய்ய அவர் தயாராக இருந்தார். ஒரு வீரர் எந்த இடத்திலும் ஆட தயாராக இருப்பதைப் பார்ப்பது நல்ல விஷயம்.”

- Advertisement -

பேட்டிங் வரிசை மாறும்:

“3 முதல் 6 வரை, யார்எங்கு வேண்டுமானாலும் களமிறங்கலாம். இதை எல்லா பேட்ஸ்மேன்களிடமும் சொல்லியிருக்கிறேன். ஓப்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் இதற்கு தயாராக இருக்க வேண்டும்.  சஞ்சு சாம்சன், சுப்மன்  கில் எங்கள் திட்டத்தில் உள்ளனர். இருவரையும் அணியில் வைத்திருப்பது எப்போதும் நல்லது.”

இதையும் படிங்க: ஆஷஸ் அல்ல, உங்களால் ஒரு முட்டை கோப்பை கூட ஜெய்க்க முடியாது.. வெறும் வாய் மட்டும் தான்.. இங்கிலாந்து ஜாம்பவான் சாடல்

” ஒருவர் ஓப்பன் செய்யலாம், ஒருவர் கீழே இறங்கி ஆடலாம். இருவருமே எல்லா ரோல்களையும் செய்ய முடியும். இது எங்கள் அணிக்கு பெரிய சொத்து. எனக்கு நல்ல தலைவலி.” பார்ம் இல்லாததாலும், பேட்டிங் ஆர்டரில் கீழே தள்ளப்பட்டதாலும் இந்த ஆண்டு டி20ஐகளில் சஞ்சு சாம்சன் தடுமாறி வருகிறார்.

14 போட்டிகளில் சராசரி 18.50, ஸ்ட்ரைக் ரேட் 121க்கும் கீழே சென்றுவிட்டது. ஆனால் கடந்த ஆண்டு பெரும்பாலும் ஓப்பனிங் செய்தபோது 13 போட்டிகளில் சராசரி 43.60. ஸ்ட்ரைக் ரேட் 180.16 என்று அசத்தினார்.  தொடர்ந்து பேசிய சூர்யகுமார், “3 முதல் 7 வரை உள்ள எல்லா பேட்ஸ்மேன்களும் எங்கு வேண்டுமானாலும் பேட் செய்ய முடியும்.திலக் வர்மாவை நம்பர் 6வது இடத்தில் பார்க்கலாம் அல்லது சிவம் துபேயை 3-ல் பார்க்கலாம்.  அணி வலுவாகவும் நன்றாகவும் இருக்கிறது” என்று சூர்யகுமார் கூறினார்.

- Advertisement -