ஆஷஸ் அல்ல, உங்களால் ஒரு முட்டை கோப்பை கூட ஜெய்க்க முடியாது.. வெறும் வாய் மட்டும் தான்.. இங்கிலாந்து ஜாம்பவான் சாடல்

0
77

ஆசஸ் தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவி தற்போது 5 போட்டிகள் கொண்ட தொடரில் 0-2 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி என்ற தொடரை வெல்வது மட்டுமல்லாமல் 5-0 என பெற்று சாதனை படைக்கும் உத்வேகத்தில் இருக்கிறது.

அப்படி நடந்தால் அது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய அவமானம் ஆகும். இந்த நிலையில் இங்கிலாந்து அணி தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தவறு செய்து வருவது முன்னாள் வீரர்களை கோபப்படுத்தி இருக்கிறது. கிரிக்கெட் ஜாம்பவானும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரருமான ஜெஃப்ரி பாய்காட், இங்கிலாந்து அணியை கடுமையாக சாடி இருக்கிறார்.

- Advertisement -

முட்டை கோப்பை கூட வெல்ல முடியாது:

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி ஒரு மோசமான போட்டியாக எங்களது அமைந்திருக்கிறது. பொறுப்பற்ற பேட்டிங், மோசமான பந்துவீச்சு கேட்ச்சை விடும் செயல் என அனைத்துமே மோசம். இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வாய்ப்பு இருந்தும்,நாம் தோல்வியை தழுவி இருக்கின்றோம்.

அதுவும் ஆசஸ் கிரிக்கெட்டில் வெறும் ஆறு நாட்களில் இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இங்கிலாந்து இங்கிருந்து வெற்றி பெற வேண்டும் என்றால் ஏதேனும் அதிசயம் நடந்தால் மட்டுமே நிகழும்.
இங்கிலாந்துக்கு வெறும் வாய் மட்டும்தான். பேசும் அளவுக்கு செயலில் காட்டுவது கிடையாது. இந்த மாதிரி ஒரு பேட்டிங் மற்றும் பந்துவீச்சை வைத்துக் கொண்டு ஆசஸ் கோப்பையை அல்ல, வெறும் முட்டை கோப்பையை கூட உங்களால் வெல்ல முடியாது.

- Advertisement -

வீரர்களுக்கு பயமே இல்லை:

பென் ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்து அணி இந்த தொடரை வெல்வதற்கான திட்டத்தை நாங்கள் நான்கு ஆண்டுகளாக மேற்கொள்கின்றோம் என்று கூறுகின்றார்.இது அத்தனையும் பொய். இனி பென் ஸ்டோக்ஸும் அவர்களுடைய அணியும் சொல்வதை எல்லாம் நாம் நம்ப முடியாது. இங்கிலாந்து வீரர்கள் வெளியே யார் என்ன அறிவுரை சொன்னாலும் கேட்பது கிடையாது.

டெஸ்ட் கிரிக்கெட் மாறிவிட்டது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே இங்கிலாந்து அணி வீரர்களை கண்டிப்பது கிடையாது.
அனைவரும் ஒருங்கிணைந்த அமர்ந்து என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து விவாதிக்க வேண்டும். கேப்டன் எப்போதுமே அதிரடியாக ஆட வேண்டும் என்றும் பயிற்சியாளர் நம்பிக்கை வையுங்கள் என்றும் தான் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: டி20 டீம்ல இருக்கிறதுக்கு.. கில் இத செஞ்சே ஆகணும்.. அடுத்த 5 வாய்ப்பு ரொம்ப அதிகம் – இர்பான் பதான் பேச்சு

இதை எல்லாம் சொல்ல நான் யார் என்று கூட அவர்கள் கேட்கலாம். எனக்கு என்ன தான் தெரியும்? நான் நான்கு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு முறை ஆசஸ் கோப்பையையும், இரண்டு முறை தொடரை சமன் செய்தும் வந்திருக்கின்றேன். தற்போது உள்ள இங்கிலாந்து அணியில் எந்த வீரர்களுக்கும் நாம் சரியாக விளையாடவில்லை என்றால் நீக்கப்படுவோம் என்ற பயமே இல்லை. அதனால் ஒரே தான் தவறை அவர்கள் மீண்டும் மீண்டும் செய்து வருகிறார்கள் என்று ஜஃப்ரீ பாய்காட் கூறியுள்ளார்.

- Advertisement -