நல்ல மனுஷங்களுக்கு நல்லதுதான் நடக்கும்.. சாம்சன் காத்திருப்புக்கு பலன் கிடைச்சிருச்சு – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
6
Surya

நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதுகுறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.

இந்திய அணியில் 10 வருடங்களாக இருந்தாலும் நிறைய வாய்ப்புகள் விளையாடுவதற்கு சஞ்சு சாம்சனுக்கு கிடைக்கவில்லை. அவரும் பெரிய போட்டிகளில் இந்திய அணிக்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கவில்லை. இந்த நிலையில் நீண்ட காத்திருப்பதற்கு தற்பொழுது பலன் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

நல்லதே நடக்கும்

இதுகுறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “இது மிகச் சிறந்த உணர்வு. இது ஒரு கால் இறுதிப் போட்டி போன்றது. நான் எப்போதும் சொல்வது என்னவென்றால் காத்திருக்கும் நல்ல மனிதர்களுக்கு நல்லது நடக்கும். அவர் விளையாடாமல் இருந்த காலகட்டத்திலும் செய்த கடின உழைப்பு தான் இப்போது பலன் கொடுத்திருக்கிறது”

“இந்த போட்டியில் நாங்கள் எல்லோருமே சிறப்பான முறையில் பந்துவீசி இருப்பதாக நினைக்கிறேன். ஏனென்றால் இங்கு 200 ரன்கள் எடுத்தாலும் நம்மால் வெற்றி பெற முடியும். பனிப்பொழிவு இருந்த காரணத்தினால் பந்து பேட்டுக்கு நல்ல முறையில் வரும். எனவே நாங்கள் போட்டியை கடைசி வரையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தோம்”

- Advertisement -

நாங்கள் தகுதியானவர்கள்

“இன்று நாங்கள் அரையிறுதியில் இருப்பதற்கு மகிழ்ச்சி. நாங்கள் முதலில் இருந்து விளையாடிய விதத்திற்கு இந்த இடத்தில் இருப்பதற்கு மிகவும் தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இப்போது நாங்கள் அடுத்த போட்டி குறித்து யோசிக்க மாட்டோம். மும்பைக்குச் சென்று அங்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்”

இதையும் படிங்க : அந்த 2 பவுண்டரி மட்டும் இல்லனா.. சாம்சனின் 97 ரன்கள் பற்றி பேசவே மாட்டீங்க.. அதனால அதையும் பாராட்டுங்க – கோச் கம்பீர் பேட்டி

“அழுத்தம் இல்லையென்றால் அழுத்தம் இல்லை. நாங்கள் பதட்டமாக இருக்கிறோம் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கிறது. ஆனால் இதையெல்லாம் எப்படி சமாளிக்கிறோம் என்பதுதான் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -