நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கடைசி பந்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.
இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் அந்த அணி தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. தற்போது புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடும் விமர்சனம்
நேற்றைய போட்டியில் இம்பேக்ட் பிளேயராக ஒரு பவுலரை எடுத்துக் கொண்டு வர முடிந்த நிலையில் கேப்டன் சூரியகுமார் யாதவ் அதை செய்யவில்லை. இந்த நிலையில் இறுதி ஓவரை அனுபவமற்ற ராஜ் பவா கையில் கொடுக்க வேண்டியதாக இருந்தது.
கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆர்சிபி கடைசிப் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எப்பொழுதும் இல்லாத அளவுக்கு திட்டரீதியாக மும்பை இந்தியன்ஸ் இந்த முறை மோசமாக செயல்பட்டுள்ளது. இது குறித்து ரசிகர்கள் கடுமையான முறையில் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இவர்களால் பெருமைப்படுகிறேன்
இது குறித்து சூரியகுமார் யாதவ் பேசிய போது “ராஜ் பவா இளம் வீரராக இருந்தாலும் அவர் இறுதி ஓவரில் செயல்பட்ட விதத்தில் நான் உண்மையில் மகிழ்வடைகிறேன். அவர் தன்னால் முடிந்த வரையில் அந்த ஓவரை மிகச் சிறப்பாக வீசி இருந்தார். அதே சமயத்தில் பேட்டிங்கில் நமன் திலக் இருவரும் விளையாடிய விதத்தில் நான் பெருமை அடைகிறேன். இந்த இருவரும் அணியை பெருமை அடைய வைத்திருக்கிறார்கள்”
இதையும் படிங்க : மும்பையை ஜெயிக்கிற தகுதி எங்களுக்கு இல்லங்கிறதுதான் உண்மை.. ஜெயிச்சாலும் பெரிய தப்பு பண்ணிட்டோம் – ரஜத் படிதார் பேச்சு
“இந்த சீசன் உண்மையில் எங்களுக்கு நல்ல முறையில் செல்லவில்லை. நாங்கள் நிச்சயம் அடுத்த சீசனில் சிறப்பான முறையில் திருப்பி வருவோம். எங்கள் வீரர்கள் இந்த போட்டியில் நான் பெருமை அடையும் அளவுக்கு விளையாடி இருந்தார்கள்” என்று கூறி இருக்கிறார்.






