நேற்று ஐபிஎல் தொடரில் பரபரப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடைசிப் பந்தில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து கேப்டன் ரஜத் படிதார் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய ஆர்சிபி அணி கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசிப் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இவர்தான் புதிய காரணம்
இந்த போட்டியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற குர்னால் பாண்டியா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். கடைசி ஓவரில் புவனேஸ்வர் குமார் அடித்த சிக்சர் வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணமாக இருந்தது. மேலும் பந்துவீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
இதுகுறித்து ரஜத் படிதார் பேசும்போது “இது இப்பொழுது பார்க்கும் பொழுது சாதாரண போட்டியாக தோன்றலாம். ஆனால் இதில் மிகவும் பரபரப்பான கடினமான போட்டி. உண்மையில் குர்னால் பாண்டியா மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர்தான் இந்த போட்டியை வென்று கொடுத்தார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஐந்தாவது இடத்தில் வந்து விளையாடுகிறார். ஏற்கனவே இது குறித்து நாங்கள் அணி கூட்டத்தில் பேசியிருந்தோம்”
வெற்றிக்கு தகுதி இல்லை
“புவனேஸ்வர் குமார் பந்துவீச்சு செயல்பட்ட விதம் மிகவும் அபாரமானது. அவருடைய கண்ட்ரோல் மிகச் சிறப்பாக இருக்கிறது. பவுன்ஸ் மாறுபாடு கொண்ட இந்த ஆடுகளத்தில் அவருடைய பந்துவீச்சை விளையாடுவது மிகவும் கடினமான விஷயம். அவர் இறுதி ஓவரில் அடித்த சிக்சர் மிகவும் முக்கியமானது”
இதையும் படிங்க : உர்வில் படேல் பேட்டிங்கை விட இவர் பேட்டிங்க்கு தலை வணங்குகிறேன்.. சாம்சன் சொன்னதுதான் வேகம் வந்தது – ருதுராஜ் பேட்டி
“அதே சமயத்தில் இந்த வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை. ஏனென்றால் எங்களிடம் எந்த போட்டியையும் வெல்ல கூடிய மிடில் ஆர்டர் இருக்கிறது. ஆனால் நேற்று நாங்கள் அந்த வகையில் சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை” என்று கூறியிருக்கிறார்






