கம்பீர் கூட நல்லா இருக்கோம்..நாங்க 2 பேரும் அடுத்து இதைத்தான் செய்வோம் – சூரியகுமார் யாதவ் பேச்சு

0
23
Surya

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் உடன் இந்திய அணி மிகவும் சிறப்பாக இருப்பதாகவும், அடுத்து தானும் கம்பீரும் சேர்ந்து என்ன செய்ய இருப்பது குறித்தும், இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக நடைபெற்ற சம்பிரதாய பத்திரிக்கையாளர் சந்திப்பில் சூரியகுமார் யாதவ் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

- Advertisement -

கம்பீரை எனக்குத் தெரியும்

இது குறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது ” நான் ஐபிஎல் தொடரில் கம்பீர் தலைமையின் கீழ் நான்கு ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அவர் எப்படி செயல்படுவார் என்ன விரும்புகிறார்? என்பது குறித்து எனக்கு நன்றாக தெரியும். மேலும் அவருடன் நான் பேசாவிட்டாலும் கூட அவர் என்ன நினைக்கிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியும். தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் அவர் பொறுப்பு ஏற்றுக் கொள்ளாத பொழுதே இந்திய டெஸ்ட் அணி குறித்து அவர் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்”

“நாங்கள் அவருடன் சரியான திசையில் பயணம் செய்கிறோம். அவர் வீரர்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறார். வீரர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறார். ஒரு வீரரின் மனதில் என்ன நடக்கிறது? என்பதை அவர் புரிந்து கொள்கிறார். மேலும் அணிக்குள் நல்ல சூழ்நிலையை பராமரிக்கிறார்”

- Advertisement -

நாங்கள் இப்படி செல்ல இருக்கிறோம்

“டி20 உலக கோப்பைக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. எனவே முன்கூட்டியே அது குறித்து நான் எதுவும் பெரிதாக சிந்திக்க விரும்பவில்லை. அதற்கு பதிலாக அந்த நிகழ்வுக்கு முன்கூட்டி நடக்கும் பயணத்தை நாங்கள் அனுபவிக்கவே விரும்புகிறோம். நாங்கள் ஒரு சிறப்பான அணியை கட்டுவதற்கு முயற்சிக்கிறோம்”

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் ஜெய்ஸ்வாலுக்கு எதிரா சொல்லல.. என் பிளேயிங் XI இதுதான் – அஸ்வின் கருத்து

“ஒரு அணி எந்த திசையில் பயணிக்கிறது? எந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் சரியான சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படுகிறார்? யாரை எங்கு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்து நாங்கள் கண்டறிய முயற்சி செய்கிறோம். ஒரே அணி நிறைய போட்டிகளில் விளையாடுவது முக்கியம். நானும் கம்பீரும் ஆசிய கோப்பை அல்லது டி20 உலக கோப்பை வரையில் இதே அணியுடன் விளையாட நினைப்போம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -