இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தன்னுடைய இந்திய பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்திருக்கிறார்.
தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி பெரும்பாலும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட அணியை போலவே இருக்கிறது. மேலும் பிளேயிங் லெவனும் அப்படியே அமைவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.
இடதுகை ஆட்டக்காரர்களின் தேவை
இந்திய அணி கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்த பொழுதும் கூட, இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முதல் ஆறு இடங்களில் ஒரு இடது கை ஆட்டக்காரர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக எதிரணி பந்துவீச்சாளர்கள் சீக்கிரத்தில் செட்டில் ஆகி சிறப்பான முறையில் பந்து வீச இது உதவியாகி விடுகிறது.
மேலும் எதிரணியில் இடது கை சுழல் பந்துவீச்சாளர்கள் அல்லது லெக் ஸ்பின்னர்கள் இருக்கும் பொழுது அவர்கள் வலது கை பேட்ஸ்மேனுக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை கொண்டு வருவதற்கு வசதியாக அமைந்து விடுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியிலும் முதல் ஆறு இடத்தில் வலது கை பேட்ஸ்மேன்கள் விளையாடுவதற்கான வாய்ப்புகள்தான் மிக அதிகமாக இருக்கிறது.
அஸ்வின் தேர்ந்தெடுத்திருக்கும் பிளேயிங் லெவன்
தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய பிளெயிங் லெவனை அறிவித்திருக்கிறார். அவராலும் இடது கை ஆட்டக்காரர்களை கொண்டு வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஆறு இடங்களில் தொடர்ச்சியாக வலது கை பேட்ஸ்மேன்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார்கள்.
மேலும் இந்த அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் என இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களுக்கும் அவரால் இடம் கொடுக்க முடியவில்லை. மேலும் தான் இருவருக்கு எதிராக கருத்து சொல்லவில்லை எனவும், ஆனால் அணி அமைப்பதில் இதைத் தவிர வேறு வழியில்லை என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.
இதையும் படிங்க : விக்கெட் எடுக்கும் போது கூட இருப்பாங்க.. ஆனா காயமடையும்போது யாரும் இருக்க மாட்டாங்க – ஷமி ஓபன் பேட்டி
ரோஹித் சர்மா (கே), ஷுப்மன் கில் (து.கே), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா/அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா .






