இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தன்னால் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தை சரியாக புரிந்து கொண்டு விளையாட முடியவில்லை என்று வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக சூரியகுமார் யாதவ் ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் விளையாடினார். அதற்குப் பிறகு அவருக்கு ஒருநாள் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியா சைமன்ட்ஸ்
ஆஸ்திரேலியாவின் அதிரடி மிடில் ஆட்டக்காரர் சைமன்ட்ஸ் போல சூரியகுமார் யாதவ் இந்திய ஒருநாள் அணிக்கு செயல்பட்டு இருக்க முடியும். அவரிடம் எல்லா வகையான ஷாட்டுகளும் இருக்கின்றன. கடைசி 10 ஓவர்களில் அவரால் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க முடியும்.
இதன் காரணமாக ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி சூரியகுமார் யாதவை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்துக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் அதை சூரியகுமார் யாதவால் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும்போது “நான் ஒருநாள் கிரிக்கெட்டை மிக நெருக்கமாக அனுபவித்திருந்தாலும், அந்த வடிவத்தில் நான் விளையாடியிருந்தாலும், இந்த படிவம் மூன்று முறைகளில் பேட்டிங் செய்ய வேண்டியது என்று நான் நினைக்கிறேன்”
இதையும் படிங்க : தோனி தேவையே இல்லாம சிஎஸ்கேல இருக்கிறதா தோணுது.. அவர் தப்பான காரணத்துக்காக ஆடறதா மாறுது – ஏபி டிவில்லியர்ஸ் வெளிப்படை பேச்சு
“விக்கெட் வேகமாக விக்கெட் விழும் பொழுது நீங்கள் களம் இறங்கி டெஸ்ட் கிரிக்கெட் போல பொறுமையாக விளையாட வேண்டும். பிறகு சரியான ஸ்ட்ரைக் ரேட் உடன் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு ஏற்றது போல விளையாட வேண்டும். இதற்கு அடுத்து இறுதிக் கட்டத்தில் டி20 கிரிக்கெட் போல அதிரடியாக விளையாடி ரன் குவிக்க வேண்டும். எனவே எனக்கு இது ஒரு போதும் புரியாத வடிவம் ஆகவே இருந்துள்ளது” என்று கூறி இருக்கிறார்.






