இந்திய கிரிக்கெட்

கம்பீர் எங்க டீம்ல என்ன செஞ்சார்னா.. அதை இஷான் கிஷான பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. மொத்தமா மாத்திட்டார் – சூரியகுமார் யாதவ் பேட்டி

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி உலகக்கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் பயிற்சியாளர் கம்பீர் எப்படியான மாற்றத்தை அளிக்கக் கொண்டு வந்திருக்கிறார் என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.

இந்த மாற்றத்தை செய்தார்

இது குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறும்பொழுது “எங்களுடைய டிரெஸ்ஸிங் ரூம் அப்படியே இருக்கிறது. ஆனால் அதில் உள்ள பாக்ஸ்கள் மட்டும் கொஞ்சம் மாறி இருக்கின்றன. ஆனால் கம்பீர் பொறுப்பேற்றதிலிருந்து இது ஒரு அற்புதமான பயணமாக மாறி இருக்கிறது. ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு டீம் விளையாட்டாக இருப்பதற்கான மாற்றத்தை அவர் உண்டாக்கி இருக்கிறார்”

“எனவே உங்கள் தனிப்பட்ட சாதனைகளை ஒதுக்கி வைத்து விட்டு நீங்கள் அணியின் நலனை பற்றி யோசிக்க வேண்டியது முக்கியம். இதை அவர் மெதுவாக அணிக்குள் செலுத்தி இருக்கிறார். இப்போது ஒரு வருடம் ஆகிவிட்டது”

- Advertisement -

இஷான் கிஷான் சாட்சி

“கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான திருவனந்தபுரத்தில் நடந்த டி20 போட்டியில் இஷான் கிஷான் 90 ரன்னில் இருந்தார். ஆனால் அவர் சதத்தை எடுப்பதற்கு ஒரு சிக்ஸர் அடித்து எட்டினார். இது எங்களுடைய அணியின் மனநிலையை காட்டுகிறது. நாங்கள் தனிப்பட்ட சாதனைகளை ஒதுக்கி வைத்து விட்டு அணியின் நலனில் கவனம் செலுத்துகிறோம்”

இதையும் படிங்க : இந்தியா கூட இந்த ஆசியா டீம் செமி பைனல் வரும்.. அடுத்த ரெண்டு டீம் இதுதான்.. என் கணிப்பு மாறாது – ரிஷப் பண்ட் பேச்சு

“எங்களுடைய வீரர்கள் இப்படியான முடிவுகளை எடுக்க முடியும் என்று நம்புகிறார்கள். ஏனென்றால் கம்பீர் அப்படியான சுதந்திரத்தை வீரர்களுக்கு கொடுத்து இருக்கிறார். எங்களுடைய டிரெஸ்ஸிங் ரூம் சூழ்நிலை மிகவும் லேசாக இருக்கிறது. மேலும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து இரவு உணவு மற்றும் உல்லாச பயணங்கள் செய்கிறோம். இது சிறிய விஷயம் ஆனால் தெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by