இந்திய நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் எந்த நான்கு அணிகள் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் என்பது குறித்து தனது கணிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தற்போது ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே மிக முக்கியமான வீரராக இருக்கிறார். ஒருநாள் அணியும் அவருடைய இடம் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அதே சமயத்தில் டி20 அணியில் அவருக்கு இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா கொடுத்த இடம்
கடந்த முறை காயத்தில் இருந்து சரியாகி வந்த ரிஷப் பண்டை நேரடியாக ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் ரோகித் சர்மா கொண்டு சென்றார். மேலும் அவருக்கு பேட்டிங் வரிசையில் டாப் ஆர்டரில் இடமும் கொடுத்தார். ஆனால் ரிஷப் பண்ட் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் தற்போது ரிஷப் பண்ட் இரண்டு ஆசிய அணிகளையும் மேலும் இரண்டு வெளிநாட்டு அணிகளையும் 2026 டி20 உலகக் கோப்பை செமி பைனலுக்கு தகுதி பெறும் என்று கணித்திருக்கிறார். இதில் அவர் இரண்டாவதாக தேர்வு செய்த ஆசிய அணி ஆச்சரியப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.
இந்த நான்கு அணிகள் வரும்
ரிஷப் பண்ட் தற்போது டி20 உலக சாம்பியன் ஆக இருந்து வரும் இந்திய அணியை தேர்வு செய்திருக்கிறார். இதற்கு அடுத்து ஆச்சரியப்படுத்தும் விதமாக அவர் கடந்த டி20 உலக கோப்பை தொடரில் அரை இறுதிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணியை தேர்வு செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : 2026 டி20 உலக கோப்பை.. ஆஸ்திரேலியா சாம்பியன் வீரர் காயத்தால் விலகல்.. இன்னொரு வீரரும் சந்தேகம்
மேலும் அவர் இந்த முறை மிகவும் பலவீனமாக பெரிய அணிகளில் காணப்படும் ஆஸ்திரேலியா அணியும், கடந்த முறை டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற தென் ஆப்பிரிக்க அணியையும் தேர்வு செய்து இருக்கிறார். அதே சமயத்தில் தற்போது சிறப்பாக காணப்படும் இங்கிலாந்து அணியை அவர் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






