இந்தியா தொடரை வென்றது.. எங்களுக்கு இப்ப இது பெரிய தலைவலியா இருக்கு.. ஓகே – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
404
Surya

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இந்திய அணி 2-1 என டி20 தொடரை கைப்பற்றியது. இந்த தொடர் வெற்றி குறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் மொத்தம் 4.5 ஓவர்கள் பந்து வீசப்பட்டு இந்திய அணி விக்கெட் இழப்பில்லாமல் 52 ரன்கள் எடுத்திருந்தது. அபிஷேக் ஷர்மா 13 பந்தில் 23 ரன், கில் 16 பந்தில் 29 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்கள். இந்த நேரத்தில் வந்த மழை தொடர்ந்து பெய்த காரணத்தினால் போட்டி கைவிடப்பட்டது.

- Advertisement -

நல்ல தலைவலியா இருக்கு

இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தோற்ற நிலையில் தற்போது டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என வென்று வெற்றியுடன் இந்தியாவுக்கு திரும்புகிறது. அடுத்தடுத்து தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது.

இது குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது ” நாங்கள் இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு திரும்பி வந்து இந்த தொடரை வென்று இருக்கிறோம். இந்தத் தொடர் வெற்றிக்கு எங்கள் அணியில் உள்ள எல்லோருமே காரணம். ஒட்டுமொத்தமாக எல்லாத் துறைகளிலும் எல்லோரும் சிறப்பாக செயல்பட்டார்கள். அர்ஸ்தீப்-பும்ரா கூட்டணி மிகவும் ஆபத்தானது. அடுத்து அக்ஷய் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஜோடி சிறப்பாக இருந்தது. வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக செயல்பட்டார். மிகவும் சிறப்பாக செயல்படுவதால் யாரை தேர்வு செய்வது என்பது நல்ல தலைவலியாக இருக்கிறது”

- Advertisement -

சிறப்பான தொடர்கள் வருகிறது

” டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து என பெரிய அணிகளுக்கு எதிராக விளையாட இருப்பது சிறந்த விஷயமாக எங்களுக்கு அமைகிறது. மேலும் சமீபத்தில் இந்திய பெண்கள் அணி சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றதை பார்த்தேன். அவர்களுக்கு கிடைத்த வரவேற்பு நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது”

இதையும் படிங்க : சூரியகுமார் கிட்ட இந்த ஒன்ன நீங்க பாக்குறதே இல்ல.. இப்ப பிரச்சனையே கம்பீரின் அந்த முடிவு தான் – பார்த்திவ் படேல் பேட்டி

“டி20 உலகக் கோப்பை தொடர் பெரிய சவாலாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். எங்களுக்கு உலகக் கோப்பைக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கிறது. நாங்கள் இரண்டு டி20 தொடர்களில் விளையாட வேண்டி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -